கேள்வி "இரண்டு தடுப்பூசி செலுத்திய பிறகும், ஓமைக்ரான் வைரசால் பலர் பாதித்து வருகின்றனர். இரண்டு ஆண்டில் ஒரு தடுப்பூசியும் போடாமல், எந்த வைரசும் தாக்காமல் பல இட்சம் பேர் இருக்கிறார்கள் இதை அறிவியல் ரீதியாக விளக்க முடியுமா? பதில் டாக்டர். அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை

கேள்வி

"இரண்டு தடுப்பூசி செலுத்திய பிறகும், ஓமைக்ரான் வைரசால் பலர் பாதித்து வருகின்றனர். இரண்டு ஆண்டில் ஒரு தடுப்பூசியும் போடாமல், எந்த வைரசும் தாக்காமல் பல இட்சம் பேர் இருக்கிறார்கள் இதை அறிவியல் ரீதியாக விளக்க முடியுமா? 








பதில் 

டாக்டர். அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை 


கொரோனாவிற்கான தடுப்பூசிகள் 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து மக்களுக்கு வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. 


ஃபைசர் , மாடர்னா , ஆஸ்ட்ரா செனிகா, சீரம் இண்ஸ்டிட்யூட் , பாரத் பயோடெக் , கமாலயா, சைடஸ்  போன்ற நிறுவனங்கள் தயாரித்துள்ள பல்வேறு தொழில்நுட்பங்களில் செயல்படும் முதல் தலைமுறை கோவிட் எதிர்ப்பு தடுப்பூசிகள் உலகமெங்கும் வழங்கப்பட்டு வருகின்றன 



இந்தியாவில் தற்போது வரை 150 கோடிக்கு மேல் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன



கோவிஷீல்டு 130 கோடி டோஸ்களுக்கு மேலும் 


கோவேக்சின் 20 கோடி டோஸ்களுக்கு மேலும் போடப்பட்டிருக்கின்றன. 


இந்த தடுப்பூசிகள் அனைத்தும் முதல் தலைமுறை தடுப்பூசிகள் என்று கூறப்படுவதன் காரணம் 



இவை ஒருவருக்கு தொற்று ஏற்படுவதை தடுக்காது. ஆனால் நோய் ஏற்படுவதை தடுக்கும் விதத்ததில் தயாரிக்கப்பட்டுள்ளன. 



ஒருவருக்கு தொற்று ஏற்படுவதை getting infected என்கிறோம்


அதுவே ஒருவருக்கு நோய் நிலை ஏற்படுவதை getting disease என்கிறோம். 



இதில் தற்போதைய தடுப்பூசிகளை நாம் போட்டுக்கொண்டாலும் நமக்கு சாதாரண கொரோனா தொற்று ஏற்படும். 



இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தொண்டை பரிசோதனை செய்தாலும் பாசிடிவ் என்றே வரும். 



ஆனால் தடுப்பூசிகளின் பலனானது 



அந்த தொற்றை தீவிர நிலைக்குக் கடத்தாமல் பாதுகாக்கும் தன்மையில் இருக்கிறது. 



இந்தியா கடந்த ஏப்ரல் மே மாதங்களில் டெல்ட்டா உருமாற்றம் மூலம் உருவான இரண்டாம் அலையைச் சந்தித்த போது 



ஒரு டோஸ் மற்றும் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் எடுத்தவர்களுக்கும் தொற்று ஏற்பட்டது ஆனால் தடுப்பூசி பெறாதவர்களை விடவும் தடுப்பூசி பெற்றவர்களிடையே தீவிர நோய் நிலையும் மரணங்களும் கனிசமான அளவு  குறைந்திருந்தன. 



தற்போதைன ஓமைக்ரான் அலையிலும் கூட நமது தடுப்பூசிகள் மூலம் கிடைத்துள்ள எதிர்ப்பு சக்தி நாள்தோறும் பல லட்சம் பேரை தீவிர தொற்றுக்க்குள்ளாகாமல் காத்து வருகின்றன. 



மும்பை பெருநகரில் ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில் அட்மிசனில் உள்ள மக்களில் 96% பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என்று அந்நகர ஆணையர் அறிவித்துள்ளார். 



சென்னை பெருநகரிலும் ஐசியூக்களிலும் ஆக்சிஜன் படுக்கைகளிலும் அட்மிசனில் உள்ள பெரும்பான்மையினர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என்பதை கல்லூரி முதல்வர்கள் வழி அறிய முடிகிறது. 



ஓமைக்ரான் அலை வலுகுறைந்ததாக தற்போது வெளிப்படுவதற்கு தமிழ்நாட்டில் நாம் எய்தியுள்ள தடுப்பூசி சதவிகிதங்கள் முக்கிய காரணமாகும். 



வார இறுதி நாட்கள் என்றும் பாராமல் தடுப்பூசி முகாம்களில் உழைத்த மருத்துவ மற்றும் அனைத்து துறை முன்களப்பணியாளர்களுக்கும் நன்றிகள் உரித்தாகுக. குறிப்பாக வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்திய செவிலியச் சகோதரிகளுக்கும் அரசு மருத்துவர்களுக்கும் நன்றிகள் உரித்தாகுக. 



டெல்ட்டா அலை ஓய்ந்த ஜூன் மாதத்தில் இந்தியா முழுவதும் செய்யப்பட்ட கொரோனா தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்திக்கான ஆய்வில் 60-70% எதிர்ப்பு சக்தி இருந்தது தெரிந்தது. இது டெல்ட்டா அலை மூலமாகவும் அதுவரை வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் கூட்டு எதிர்ப்பாற்றலாகும். 



அதற்குப்பிறகு மூன்றாம் அலை தோன்றுவதற்கு முன்பு வரை இந்தியாவில் நூறு கோடிக்கும் மேல் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு இந்த கூட்டு எதிர்ப்பாற்றல் பெருக்கப்பட்டது. 



எனவே சமூகத்தில் தடுப்பூசி பெற்றோர் சதவிகிதம் பெரும்பான்மையை அடைந்தது. 

தமிழ்நாட்டில் ஒரு டோஸ் பெற்றவர்கள் 90% க்கும் மேல் 

இரண்டு டோஸ் பெற்றவர்கள் 60%க்கும் மேல். 


இதன் விளைவாகவே நம்மால் சிறப்பான நிலையில் இருந்து மூன்றாம் அலையை எதிர்கொள்ள முடிந்திருக்கிறது. 


தற்போது ஓமைக்ரான் பலருக்கும் சாதாரண தொற்றாகக் கடந்து செல்கிறது. 

ஆக்சிஜன் மற்றும் ஐசியூ தேவை பல மடங்கு குறைந்திருக்கிறது. 


இதற்கான முக்கிய காரணம்

பெரும்பான்மை மக்களை சென்றடைந்த தடுப்பூசி இயக்கமாகும். 


சாதாரண தொற்றை தடுப்பூசிகள் தடுக்காமல் போனாலும் 

அறிவியல் நிச்சயித்தது போலவே 

தீவிர தொற்றில் இருந்து மக்களை தடுப்பூசிகள் காத்துக் கொண்டிருக்கின்றன என்று கூறி நிறைவு செய்கிறேன்

 

ஒருவரிடம் இருந்து தொற்று மற்றொருவருக்குப் பரவுவதை தடுப்பூசிகள் தடுப்பதில்லை ஆதலால் தடுப்பூசி பெற்றவர்களும் இந்த காலகட்டத்தில் முகக்கவசத்தை முறையாக அணிய வேண்டும். 


நன்றி 


 டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர்

சிவகங்கை 

13.01.2022

Post a Comment

0 Comments