🌀ஊதிய படிநிலை முடிந்தவர்களுக்கு 46 - 50 படிநிலைகள் உருவாக்கப்படுமா RTI பதில்.
![]() |
| CCK RTI Reply |
📢கேள்வி
🌀மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வணக்கம். தமிழ்நாட்டில் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாத ஒரே ஆசிரியர் இனம் இடைநிலை ஆசிரியர்கள் தான். கடந்த இரண்டு (2006 & 2016) ஊதிய மாற்றங்களில் இடைநிலை ஆசிரியர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். ஆதலால் 2016-இல் வழங்கப்பட்ட ஊதிய மாற்றத்திற்கு பின்பு 5 ஆண்டுகளிலேயே அதாவது 2021 ஆம் ஆண்டிலேயே நிலை (Level) 10 இல் வரையறுக்கப்பட்ட உச்சபட்ச தளம் (Cell) 40 ஐ மூத்த இடைநிலை ஆசிரியர்கள் எட்டிவிட்டனர். அதை ஈடுகட்ட 5 தளங்கள் அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அவை 2025 ஆம் தூத்துக்குடி ஆண்டிலேயே நிறைவுபெற்றுவிட்டன.
2026 ஜனவரி முதல் வருடாந்திர ஊதிய உயர்வு அளிக்க வழிவகை இல்லாமல் ஊதிய தேக்க நிலையில் ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் உள்ளனர். ஆகவே தாங்கள் இவ்விடயத்தில் தனிக்கவனம் செலுத்தி வருடாந்திர ஊதிய உயர்வு அளிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யவேண்டுமென எங்களது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டக்கிளை சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
📢பதில்
🌀ஊதிய நிலை ஆணைகளில் கூடுதல் கலங்களை உருவாக்குதல் (Creation of Additional Cells in the Pay Level- 40 to 45) தொடர்பாக அரசாணை நிலை எண்.90.நாள்:26.02.2021 வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கலங்கள் உருவாக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு பரிசீலணையில் உள்ளது.அரசிடமிருந்து உரிய ஆணை பெற்றவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

0 Comments