💫cckkalviseithikal💫 ⏩TET தேர்வு எழுத உள்ள ஆசிரியர்களுக்கு பணிச்சான்று உடனடியாக வழங்க உத்தரவு. தவறினால் முதன்மை கல்வி அலுவலர்கள்/ மாவட்ட கல்வி அலுவலர்கள் பொறுப்பேற்க வேண்டும்

💫cckkalviseithikal💫
⏩TET தேர்வு எழுத உள்ள ஆசிரியர்களுக்கு பணிச்சான்று உடனடியாக வழங்க உத்தரவு. தவறினால் முதன்மை கல்வி அலுவலர்கள்/ மாவட்ட கல்வி அலுவலர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

பள்ளிக்கல்வி இயக்குநரின் உத்தரவு விவரம் 👇

Click here

CCK Director Proceedings 


பொருள்-

🚀தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப்பணி பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளின் சுயநிதிப் பிரிவின் கீழும் பணிபுரியும் ஆசிரியர்கள் -சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 தேர்விற்கு விண்ணப்பிக்க பணிச்சான்று வழங்குதல் வழிகாட்டு நெறிமுறைகள் சார்பாக.

பார்வை-

1. அரசாணை நிலை எண்.231. பள்ளிக் கல்வித் (ஆ.தே.வா) துறை, நாள்.13.10.2025

2. ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.01/2026. 13.02.2026

💥பார்வை (1)-இல் காணும் அரசாணையின் படி இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிக்கை பார்வை (2)-இன் படி வெளியிடப்பட்டுள்ளது.

💥பார்வை (2)-இல் காணும் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையில். தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் சுயநிதிப் பிரிவுகளில் 01.09.2025 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ இடைநிலை ஆசிரியர். பட்டதாரி ஆசிரியர் மற்றும் பிற அதற்கு இணையான பணிநிலைகளில். 

காலமுறை ஊதியம் / தொகுப்பூதியம் / பகுதிநேர ஊதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டு பணிபுரியும் ஆசிரியர்கள். ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பு கல்வியியல் பட்டதாரி ஆசிரியர்கள் (IEDSS) ஆகியவர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் எனவும் தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10.04.2026 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

💥மேற்கூறிய ஆசிரியர்கள் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க பணிச்சான்று எனத் பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியம் தெரிவிக்கப்பட்டுள்ளதால். பணிச்சான்றினை 10.04.2026 முன்னரே வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் /மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


cckkalviseithikal

💥பணிச்சான்று கிடைக்கப்பெறாமலோ அல்லது தாமதமாகக் கிடைக்கப்பெற்றாலோ அதனால் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் /மாவட்டக் கல்வி அலுவலர்கள் பொறுப்பேற்க நேரிடும். எனவே. இந்நிகழ்வில் தனிக்கவனம் செலுத்தி, காலம் தாழ்த்தாமல் மேற்கூறிய அனைத்து ஆசிரியர்களுக்கும் உடனடியாக பணிச்சான்று வழங்குமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்டக் கல்வி அலுவலர்கள்.

-பள்ளிக் கல்வி இயக்குநர்

Post a Comment

0 Comments