💫cckkalviseithikal💫 📌ஒருங்கிணைந்த 4 ஆண்டு B.A, B.Ed & B.Sc, B.Ed படிப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

💫cckkalviseithikal💫
📌ஒருங்கிணைந்த 4 ஆண்டு B.A, B.Ed & B.Sc, B.Ed படிப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.

🚀தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக பதிவாளரின் அறிவிப்பு.

Click here

CCK Integrated Course 


  • தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் கடந்த 12.09.2025 அன்று பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

  • அதில் National Council for Teacher Education (Recognition Norms and Procedure) Amendment Regulations, 2014 dated 25.01.2024 படியும், 03.07.2025 நாளிட்ட அரசு இதழ் அறிவிப்பின் மூலம் மேலும் திருத்தப்பட்டபடியும், 

  • ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி.,பி.எட் மற்றும் பி.ஏ.,பி.எட் (B.Sc.B.Ed & B.A.B.Ed) பட்டப்படிப்புகள் 

  • 2026-2027-ஆம் கல்வியாண்டிலிருந்து நிறுத்தப்பட்டதாகவும், மேலும் 

  • ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி.,பி.எட் மற்றும் பி.ஏ.,பி.எட் பட்டப்படிப்புகள் நடத்தும் எந்தவொரு கல்விநிறுவனமும் புதிய மாணவர் சேர்க்கை செய்ய அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


📌மேற்குறிப்பிட்டுள்ள, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் 12.09.2025 அன்று பொது அறிவிப்பின் படி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்று இயங்கும் கல்வியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி., பி.எட் மற்றும் பி.ஏ.,பி.எட் (B.Sc.B.Ed & B.A.B.Ed) பட்டப்படிப்புகளில் 2026-2027-ஆம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை செய்ய வழிவகை இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 


📌மேலும் விதிகளை மீறி மாணவர் சேர்க்கை செய்தால் இப்பல்கலைக்கழகம் எவ்விதத்திலும் பொருப்பெற்காது எனத் தெரிவிக்கலாகிறது.

பெறுநர்

cckkalviseithikal

5. பதிவாளர்

முதல்வர்கள்/தாளாளர்கள்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன்

இணைவுப்பெற்றுள்ள பி.எஸ்சி.,பி.எட் மற்றும் பி.ஏ.,பி.எட் (B.Sc.B.Ed & B.A.B.Ed)

கல்வியியல் கல்லூரிகள்

Post a Comment

0 Comments