💫cckkalviseithikal💫 நாளை 04.03.2026 உள்ளூர் விடுமுறை. ஈடு செய்யும் வேலை நாள் சனிக்கிழமை - மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

💫cckkalviseithikal💫

நாளை 04.03.2026 உள்ளூர் விடுமுறை. ஈடு செய்யும் வேலை நாள் 07.03.2026 சனிக்கிழமை - மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு.

CCK Collector order 


கன்னியாகுமரி மாவட்டம். சுவாமித்தோப்பு, அய்யா வைகுண்டசாமியின் 194 வது அவதார திருவிழா வருகின்ற 04.03.2026 (புதன்கிழமை) அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, 


பார்வை 1-ல் கண்டுள்ள அரசாணையின்படி வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பிற்குற்பட்டு 04.03.2026 அன்று தென்காசி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை ( Local Holiday) நாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது.


மேற்குறிப்பிட்ட நூளில் அரசு தேர்வுகள் ஏதுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மற்றும் கல்லாரி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.


மேலும் உள்ளூர் விடுமுறையானது செலாவணி முறிச்சட்டம் 1881 (Uncer Negotiable Instrument Act-1882)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால். வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது

இம்மாவட்ட கருவூலம். சார்நிலைக்கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பான அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 07.03.2026 சனிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

AK KAMAL KISHORE

மாவட்ட ஆட்சித்தலைவர். தென்காசி.

  • இதே போன்று 
  • கன்னியாகுமரி
  • திருநெல்வேலி
  • தூத்துக்குடி மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments