சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (STET) குறித்த முழுமையான விவரங்கள் மற்றும் பணிச் சான்றிதழ்.
TRB Notification 👇
Click here
ஆசிரியர் தேர்வு வாரியம்
cckkalviseithikal
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக அரசு / அரசு உதவிபெறும் /தனியார் பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள் - I மற்றும் தாள் - II) நடத்துவதற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (Website: http://www.trb.tn.gov.in) 13.02.2026 இன்று வெளியிடப்படுகின்றது.
இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் பணியிலிருக்கும் ஆசிரியர்கள் 01.09.2025க்கு முன்னர் ஆசிரியர்களாக நியமனம் செய்து பணிபுரிந்து வர வேண்டும்.
cckkalviseithikal
இத்தேர்விற்கான விண்ணப்பம் சார்ந்த அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்க 👇
Click here
மேலும், இத்தேர்விற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க 18.02.2026 முதல் 10.04.2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
-தலைவர்
நாள்:: 13.02.2026
இடம்:சென்னை-6
cckkalviseithikal
பணியில் உள்ள ஆசிரியர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
பிப்ரவரி 18 ஆம் தேதி முதல் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஏப்ரல் 11 முதல் 13 வரை விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்யலாம்.
தேர்வு நடைபெறும் (தற்காலிக) நாட்கள்
முதல் தாள் : 04.07.2026
இரண்டாம் தாள் : 05.07.2026
பணி உள்ள ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர் / முதன்மை கல்வி அலுவலரிடம் பணிச் சான்றிதழில் கையொப்பம் பெற வேண்டும்.



0 Comments