💫cckkalviseithikal💫 📽️அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்து ரீல்ஸ் எடுத்த தவெகவினர். பொதுமக்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி

💫cckkalviseithikal💫
📽️அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்து ரீல்ஸ் எடுத்த தவெகவினர். பொதுமக்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி.

📽️விழுப்புரம் மாவட்டம் காணை அருகே மாம்பழப்பட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அங்கு கல்வி பயின்று வருகின்றனர். 


CCK News



📽️இந்த பள்ளிக்குள் தவெக காணை ஒன்றிய செயலாளரான ஜான்பீட்டர் உள்பட 10க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் ஆய்வுக்கு செல்வதுபோல் உள்ளே சென்றுள்ளனர்.

  • பின்னர் அங்குள்ள தலைமை ஆசிரியர் அறைக்கு சென்ற தவெகவினர் 

  • பள்ளி எவ்வாறு செயல்படுகிறது?

  • மாணவர்கள் எவ்வாறு படிக்கின்றனர்? என கேள்வி எழுப்பிய தோடு

  • பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்து உயர் அதிகாரிகள்போல் தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டுள்ளனர். 



இதனிடையே முதல்வர் விஜயின் கட்சி துண்டுடன் தவெகவினர் பள்ளிக்குள் நுழைந்திருப்பதைக் கண்ட, மாணவர்கள் விசில் அடித்து ஆரவாரத்தில் ஈடுபட. ஒரு வகுப்பறைக்குள் புகுந்த தவெகவினர் மாணவர்களுக்கு பாடம் எடுத்தும் சில அறிவுரைகளை கூறவே ஆசிரியர்கள், ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

பள்ளி ஆய்வுக்கு வரும் அரசு அதிகாரிகளே இதுபோன்று நடந்து கொள்ளாத போது, 10ம் வகுப்பே முடிக்காத தவெக ஒன்றிய செயலாளர் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு அறிவுரை கூறி, ஆசிரியர்களிடம் கேள்வி கேட்டதோடு அதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Post a Comment

0 Comments