💫cckkalviseithikal
⭐போராட்டத்தில் ஈடுபட்ட 30 ஊராட்சி செயலர்களை மாவட்ட மாறுதல் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
☀️திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி செயலர்கள் 30 பேரை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பணியிடமாறுதல் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
🚀உத்தரவு விவரம்
📌பணியமைப்பு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் கிராம ஊராட்சி செயலாளர்களை நிர்வாக நலன் கருதி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஒரு வழி மாவட்ட மாறுதல் செய்து ஆணையிடப்பட்டது பணியிலிருந்து விடுவிப்பு செய்து ஆணையிடல்.
📑பார்வை:
சென்னை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்:878BB/2025/எப்5, : 17.02.2026.
📝ஆணை:
📌திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணிபுரிந்து வரும் கீழ்க்காணும் ஊராட்சி செயலாளர்களை நிர்வாக நலன் கருதி கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகிற்கு மாவட்ட மாறுதல் அளித்து பார்வையில் காணும் செயல்முறைகளில் உத்தரவிடப்பட்டுள்ளது.
✨எனவே, திண்டுக்கல் மாவட்ட ஊரசு வளர்ச்சி அலகிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகிற்கு நிர்வாக நலன் கருதி ஒரு வழி மாவட்ட மாறுதல் செய்யப்பட்டுள்ள மேற்காணும் 30 ஊராட்சி செயலாளர்களை திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகிலிருந்து கீழ்க்கண்ட நிபந்தனையுடன் 17.02.2026 பிற்பகல் பணியிலிருந்து விடுவித்து ஆணையிடப்படுகிறது.
📄நிபந்தனை
🔗தனியர் கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் பணியேற்கும் நாளின் அடிப்படையில் ஊராட்சி செயலாளர் நிலையிலான முதுநிலை பட்டியலின் இறுதியில் தனியர்களது முதுநிலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.
🔗மேற்காணும் ஊராட்சி செயலாளர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகிலிருந்து பணி நியமன ஆணை பெற்று பணியேற்பு செய்திட தெரிவிக்கப்படுகிறது.
📑இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Comments