🚀 cckkalviseithikal தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 18 மற்றும் 20 ஆம் தேதிகளில் 100 நாள் சவால் ஆய்வு.
![]() |
| CCK news |
⭐தமிழ்நாடு - தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அடிப்படைக் கற்றல் திறனை சோதனையிடும் 100 நாள் சவால் நிகழ்வு வரும் 18 மற்றும் 20 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
⭐இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
- 💫2024-25-ம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி களில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின்
- தமிழ்
- ஆங்கிலம் வாசிப்பு
- கணிதத் திறன் கற்றல் அடைவுகள் குறித்து 100 சவாலை பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
💫அதன்படி, நடப்பு கல்வி யாண்டில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் 100 நாட்கள் சவாலுக்குத் தயார் நிலையில் உள்ளதாக முன்மொழியப்பட்டுள்ளது.
💫இம்மாதம் 3 வதுவாரத்தில் 100 நாள்கள் சவால் மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட உள்ளது.
🚀அதன்படி, 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் 18 ஆம் தேதியும்
🚀4,5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 20 ஆம் தேதியும் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படைத் திறன்களை மதிப்பீடு செய்ய வேண்டும்.
📝ஒரு வகுப்புக்கு குறைந்தபட்சம் 5 மாணவர்களிடம் இந்த கற்றல் அடைவுத் திறன் சோதிக்கப்பட வேண்டும்.
📔இந்த தகவலை அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அலுவலர்கள்
- மக்கள் பிரதிநிதிகள்
- பள்ளி மேலாண்மைக் குழு பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த சோதனை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments