தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராய ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அதன் அறிக்கையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இன்று (30.12.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்திட அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையினை குழுவின் தலைவரும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளருமான திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. த. உதயச்சந்திரன், இ.ஆ.ப., நிதித்துறை துணைச் செயலாளர் (வரவு-செலவு) திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., குழு உறுப்பினர் டாக்டர் கே.ஆர்.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
முழுமையான விவரங்கள் விரைவில் தெரியவரும்.

0 Comments