நூதனமான முறையில் பள்ளியில் ஆசிரியர்களின் மொபைல் திருடும் கும்பல்.
ஆண்கள் இரண்டு, மூன்று பேர் ஒரு குழுவாக பள்ளிக்கு வந்து நாங்கள் ஆர்ட் அண்ட் கிராப்ட் மாணவர்களுக்கு கற்றுத் தருகிறோம் என்று கூறி, மாதிரிக்காக சில தாள்களை மேஜை மீது ஆசிரியர்கள் போன் மேல் வைத்து விடுகிறார்கள் ஆசிரியர்கள் வேண்டாம் என்று சொன்னால், பேப்பரோடு சேர்த்து மொபைலை எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார்கள். .
இது போன்று கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியிலும் அவிநாசியில் இரண்டு பள்ளிகளிலும் மொபைல்களை திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து ஆசிரியர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

0 Comments