தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விரைவில் கலந்தாய்வு - கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விரைவில் கலந்தாய்வு - கல்வித்துறை அதிகாரிகள் தகவல்




தமிழகம் முழுவதும் தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் காலிப் பணியிடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தமிழகத்தில் 24 ஆயிரத்து 310 தொடக்கப்பள்ளிகளும், 7 ஆயிரத்து 24 நடுநிலைப்பள்ளிகளும், 3 ஆயிரத்து 135 உயர்நிலைப் பள்ளிகளும், 3 ஆயிரத்து 110 மேல்நிலைப்பள்ளிகளும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இவற்றில் தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் கடந்த 3 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.


இதற்கிடையில் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பை அடுத்து அதை செயல்படுத்துவதற்கான பணிகளில் பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. எனவே இத்தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு உடனடியாக பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தி தலைமையாசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். 


cckkalviseithikal அதற்கேற்ப அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களிடம் இருந்தும் தகுதித் தேர்வு ஆசிரியர்களின் பட்டியலை பள்ளிக் கல்வித்துறை பெற்று முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வுக்கான தேதி விரைவில் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments