மாணவர்களைக் கால் அமுக்கச் சொன்ன தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாவேரிப் பட்டி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 32 மாணவ, மாண விகள் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரி யையாக கலைவாணி பணியாற்றி வருகிறார்.
கடந்த வாரம் 30ம் தேதி மதியம், பள்ளியில் உணவு அருந்திய தலைமை ஆசிரியை கலைவாணி, வகுப்பறை யில் மாணவர்களை தனது காலை அமுக்கி விடும்படி கூறியதால், 2 மாணவர்கள் அவருக்கு காலை அமுக்கி விட்டனர். இந்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது.
cckkalviseithikal
இதையடுத்து, தலைமை ஆசிரியை கலைவாணியை, கே.வேட்ரப்பட்டி தொடக்கப்பள்ளிக்கு இடமாற்றம் செய் யப்பட்டார். அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை அளித்த நிலையில், நேற்று தலைமை ஆசிரியை கலை வாணியை, சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

0 Comments