எப்பய்யா பாடம் நடத்துறது? புதிய புதிய திட்டங்கள், விழா கொண்டாட்டங்களால் ஆசிரியர்கள் புலம்பல்.

 எப்பய்யா பாடம் நடத்துறது? புதிய புதிய திட்டங்கள், விழா கொண்டாட்டங்களால் ஆசிரியர்கள் புலம்பல்.




cckkalviseithikal

ஆசிரியர் பணி என்பது நாளைய தலைமுறையை உரு வாக்கும் ஒரு அர்ப்பணிப்பு பணி. அத்தகைய பணியை செய்யவேண்டிய தாங்கள் இன்று பல்வேறு பணிகளைச் செய்ய வேண்டியிருப்பதாக புலம்புகின்றனர் ஆசிரியர்கள். பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழக அரசு ஆசிரியர்களுக்கு கொடுக்கும் பணிகளை ஆசிரி யர் ஒருவர் பட்டியலிட்டு வெளி யிட, அது, சமூகவலைதளங்க ளில் வைரலானது.


'காமராஜர் விழா, கலை ஞர் விழா, அண்ணா விழா, ஆசிரியர் தின விழா, குழந் தைகள் தினவிழா, எரிசக்தி தினவிழா, நீர் மேலாண்மை விழா, சுற்றுச்சூழல் தின விழா, ஓசோன் விழிப்புணர்வு விழா, பெண் சக்தி விழா, இலக்கியமன்ற விழா, ஆண்டு விழா உள்ளிட்ட விழாக்களும், வானவில் மன்றம், சிறார் திரைப்படம், மொழி ஆய்வகம், நுாலக மன்றம், வாசிப்பு இயக்கம், அறிவியல் கண்காட்சி உள் ளிட்ட நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும். புத்தக கண்காட்சி, நுாலகம் அழைத் துச் செல்ல வேண்டும்.


இவை மட்டுமல்லாமல், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், கல்வி உதவித்தொகை, நோட்டு, புத்தகம், காலணி, வரைபடக் கருவி, சைக்கிள் இலவச பயண அட்டை, சீருடை, சத்துணவு தொடங்கி விட்ட மின் மாத்திரைகள், தடுப்பூசி வரை நிகழ்ச்சி களை ஒருங்கிணைக்க வேண்டும். மாவட்ட, மாநில விளையாட்டுகள், முதல்மைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள், தமிழ்த் திறனறித் தேர்வு, முதல்வர் திறன் தேர்வு உள்ளிட்ட cckkalviseithikal போட்டி மாணவர்களை கலந்துகொள்ளச் செய்ய வேண்டும்.


மறுபுறம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டுத் தேர்வுகள், விடைத்தாள் திருத் தும் பணி. அதன் மதிப்பெண்களை எமிஸில் பதிவேற்றம், நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஆயத்தப்படுத்துதல், காலை, மாலை சிறப்பு வகுப்புகள், உளவியல் நிபுணர்கள் வகுட் புகள், பெற்றோர் கூட்டம். பள்ளி மாணவர்களுக்கு இ-மெயில் தொடங்கி ப கொடுப்பது உள்ளிட்ட 118 பணிகளுடன், மாணவர் சேர்க்கைக்காக ஊர் ஊராய் திரிவது, இடைநிற்றல் மாண வர்களை கண்டுபிடித்து கொண்டு வருவது. இன்னும் பல (யோசிச்சுகிட்டே இருக் காங்க...) இதுல எப்பய்யா பாடம் நடத்துறது? கொஞ் சம் யோசிச்சு பாருங்க சாமி" என்று புலம்புகிறது அந்தட் பதிவு.


"இப்படி பணிகளுக்கு மேல் பணிகளாக அடுக்கிக்கொண்டே இருப்பதால், என்ன வேலை செய்கிறோம் என்று தெரியாமல் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் என பல்வேறு உடல்நலப் பிரச்னைகளில் சிக்கி தவிக் கிறோம்" என்று வேதனை யுடன் சொல்கின்றனர் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்.


Post a Comment

0 Comments