புதிய இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி SCERT இயக்குநரின் செயல்முறைகள்.

 புதிய இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி SCERT இயக்குநரின் செயல்முறைகள்.

Click here




பார்வை (1) இல் காணும் 2023-2024 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகளில் அறிவிப்பு எண்.11

பின்வருமாறு

-புதிய ஆசிரியர்களுக்கான பயிற்சி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தெரிவு
செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பணியில் சேருவதற்கு முன்னர் கற்றல் கற்பித்தல் மற்றும் அடிப்படை நிருவாகப் பயிற்சிகள் வழங்கப்படும்.


மேற்காணும் அறிவிப்பினை நடைமுறைப்படுத்துதல் சார்ந்து 2023-2024 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டு, தற்போது பணிநியமனம் வழங்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் விவரம் தொடக்கக்கல்வி இயக்ககத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. அவர்கள் பணியில் சேர்ந்த பின்னர் 04.08.2025 முதல் கற்றல் கற்பித்தல் மற்றும் அடிப்படை நிருவாகப் பயிற்சிகள் அந்தந்த மாவட்டங்களில் இணைப்பில் உள்ளவாறு வழங்கப்படவுள்ளது. எனவே, தெரிவு செய்யப்பட்டு தற்போது பணிநியமனம் வழங்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கிட ஏதுவாக அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி

cckkalviseithikal

மையத்தில் குடிநீர், காற்றோட்டம் மற்றும் கழிப்பிட வசதிகள் உள்ள இடத்தினை தெரிவு செய்தும், மேலும், தங்களது நிறுவனத்தில் தகுந்த வசதிகள் இல்லாத பட்சத்தில் உரிய பயிற்சி மையத்தினை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் /மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலருடன் இணைந்து தெரிவு செய்து எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் காலை, மாலை தேநீர் மற்றும் மதிய உணவுடன் கூடிய 5 நாள்கள் பயிற்சியினை நடத்திடுமாறு சார்ந்த நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இப்பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு பயணப்படி மட்டுமே (Actual Travel Expenditure only) அனுமதிக்கப்படுகிறது. பயிற்சி முடிவுற்ற பின்னர் பங்கேற்பாளர்கள் விவரத்துடன் அறிக்கையினை (Documentation and Expenditure details) இந்நிறுவனத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.


மேற்படி பயிற்சியில் தங்களது மாவட்டத்தில் பங்கேற்கும் இடைநிலை ஆசிரியர்களின் விவரங்களை சரிப்பார்த்து, உரிய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 04.08.2025 முதல் பயிற்சியில் பங்கேற்கும் வண்ணம் பணிவிடுவிப்பு செய்திடுமாறு அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர்கள் மூலம் அறிவுரைகளை வழங்கிட அறிவுறுத்திடுமாறு உரிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


இப்பயிற்சிக்கான உத்தேச செலவினத் தொகை உரிய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன வங்கிக் கணக்கிற்கு பின்னர் விடுவிக்கப்படும்.

Post a Comment

0 Comments