பணிநிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

 பணிநிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.





குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 மற்றும் பார்வை 1 முதல் 3 வரை உள்ள அரசாணைகளைப் பின்பற்றி 01.08.2024 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் (Staff Fixation) செய்யப்பட்டு. பார்வை 4-ன்படி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து (தொடக்கக் கல்வி) விவரங்கள் பெறப்பட்டுள்ளது.


அதனடிப்படையில், தொடக்கக் கல்வி இயக்கக நிருவாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 01.08.2024 நிலவரப்படி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டதில், ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்டவர்களுக்கு 03.07.2025 அன்று EMIS இணையதள வழியாக பணி நிரவல் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.


அக்கலந்தாய்வில் பங்கேற்று நிரப்பத் தகுந்த காலிப் பணியிடங்கள் மற்றும் கூடுதல் தேவையுள்ள பணியிடங்களுக்கு பணிநிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவங்களில் முழுமையாக பூர்த்தி செய்து 25.07.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் deeesection@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கெள்ளப்படுகிறார்கள்.


cckkalviseithikal


இணை இயக்குநர் (நிர்வாகம்)

Post a Comment

0 Comments