பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு நடத்துதல் சார்ந்து முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு நடத்துதல் சார்ந்து தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.
Click here
தருமபுரி மாவட்டத்தில் அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் 2024.2025 ஆம் கல்வியாண்டின் 01.08.2024-இல் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுவதற்கு பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் பெறப்பட்டு 01.08.2024 நிலவரப்படி பார்வை(1) முதல் பார்வை(7) வரை உள்ள அரசாணைகள் மற்றும் பார்வை(9)-இல் காணும் செயல்முறைகளை பின்பற்றி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.
0108.2024 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டதில் ஆசிரியருடன் உபரி என கண்டறியப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு நடத்துவது சார்ந்து பார்வை(10)-இல் காணும் 26.06.2025 நாளிட்ட செயல்முறை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் சம்மந்தப்பட்ட உபரி ஆசிரியர்களின் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
cckkalviseithikal
எனவே, இணைப்பில் காணும் பட்டியலில் ள்ள உபரி ஆசிரியர்களின் பணிநிரவல் கலந்தாய்வு 07.07.2025 அன்று தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கூட்ட அரங்கில் காலை 9.00 மணியளலில் நடைபெறுவதால் சார்ந்த ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து அன்னாரை பணிவிடுத்து அனுப்பி வைக்குமாறு சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உபரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வில் முன்னுரிமை (Priority)
மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்.
2. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள். டையாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவர்கள்,
இருதய மூளைக்கட்டி அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோயாளிகள்.
3 இராணுவத்ல் பணிபுரிவர்களின் மனைவியர்.
விதவைகள் / மனைவியை இழந்தவர்கள் மற்றும் 40 வயதை கடந்த திருமணம் செய்து கொள்ளாத பெண் பணியாளர்கள் மற்றும் சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண் ஆசிரியை,
பட்டியலில் உள்ள உபரி ஆசிரியர்களில் மேற்கண்டவாறு முன்னுரிமை கோரும் பணியாளர்கள் சார்ந்த விவரம் உரிய சான்றுடன் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரின் கடிதத்துடன் 04.07.2025 காலை 10.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கவும். நடைபெறும் நாளில் மேற்காணும் சான்று உரிய ஆசிரியரால் முன்னிலைப்படுத்தப்பட்டால் ஏற்க இயலாது என்பதையும் உரிய ஆசிரியர்களுக்கு தெரிவிக்க சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
0 Comments