எங்களை மீறி இயக்கத்துல ஒன்னும் பண்ண முடியாது. சர்ச்சையை ஏற்படுத்திய ஆசிரியர் சங்க பேனர்.
விருதுந கர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே ஆசி ரியர் சங்கத்தினர் வைத் திருந்த சர்ச்சைக்குரிய பேனர் அகற்றப்பட்டது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி விருதுநகர் வட்டாரக் கிளை சார்பில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே வைக்கப்பட்டிருந்த பேனர் கடும் சர்ச்சைக்கு உள்ளானது.
அந்த பேனரில்,
"சுத்தி பத்து ஏரியால நாங்க வைச்சது தான் சட்டம். எங்களை மீறி இயக்கத்தில் யாரும் ஒன்னும் பண்ண முடியாது - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரி யர் கூட்டணி விருதுநகர் வட்டாரக் கிளை விருதுநகர் மாவட்டம்"
என்ற வாசகங்களுடன் 19 ஆசிரியர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தது. இந்த பேனரின் படம் சமூக ஊடகங்களில் வைரலானது. இதனையடுத்து மாணவ, மாணவிகளுக்கு முன்னுதாரணமாக திகழவேண்டிய ஆசிரியர்களே இதுபோன்று செய்யலாமா என கடும் எதிர்ப்புகிளம்பியது. இதனையடுத்து அந்த பேனரை ஆசிரியர்கள் சங்கத்தினர் அகற்றினர்.
0 Comments