பள்ளியில் இனிப்பு வழங்கிய விவகாரம். ஆசிரியர் பணியிட மாற்றம்.

 பள்ளியில் இனிப்பு வழங்கிய விவகாரம். ஆசிரியர் பணியிட மாற்றம்.




 மணப்பாறை அருகே அரசுப் பள்ளியில் அரசியல் பிரமுகர் இனிப்பு வழங்கிய விவகாரம் தொடர்பாக உதவி தலைமை ஆசிரியை வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப் பட்டார். cckkalviseithikal 


திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே இடையப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் நேதாஜி என்பவர் இனிப்பு வழங்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வெளியானது.


இது தொடர்பாக சிலர் நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறைக்கு பரிந்துரைத்தனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், பள்ளித் தலைமை ஆசிரியர் பணி நிமித்தமாக திருச்சி சென்றிருந்த நிலையில், பணியிலிருந்த உதவி தலைமை ஆசிரியை அமுதா, பள்ளியில் அரசியல் கட்சியினர் இனிப்பு வழங்க அனுமதியளித்துள்ளார்.


இது விதிமுறை மீறல் எனவும் துறை ரீதியான நடவடிக்கையாக, உதவி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும், அந்த பள்ளியின் 5 ஆசிரியர்களுக்கு இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments