தமிழ்நாட்டில் 207 பள்ளிகள் மூடப்பட்டது குறித்து கல்வித்துறை விளக்கம்.
Click here
பத்திரிகைச் செய்தி நாள் 12.08.2025
தொடக்கக் கல்வி இயக்ககம்
cckkalviseithikal
207 அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பூஜ்ஜியம் என்று 12.08.2025 தினமலர் நாளிதழில் வந்த செய்திக்கு விளக்கம்
தமிழ்நாட்டில் 207 அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆனதால் அப்பள்ளிகள் மூடப்பட்டு வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது என 12.08.2025 தேதிய தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது.
2025-26ஆம் கல்வியாண்டில் மாநிலத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளின் எண்ணிக்கை விவரம்.
New Delhi, Ministry of Health & Family Welfare 2020 ஜூலையில் வெளியிட்ட இந்திய மக்கள் தொகை குறித்தான Population Projections for India and States 2011-2036 (Report of the Technical Group on Population Projections) அறிக்கையில் தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2011ல் 0-1 வயதில் 10.74 லட்சமாக இருந்த மக்கள் தொகை 2016ல் 10.45 லட்சமாகவும் 2021ல் 9.53 லட்சமாகவும் குறைந்துள்ளது. 2026ஆம் ஆண்டைப் பொறுத்தவரை அது மேலும் குறைந்து 8.78 லட்சமாக குறையும் என மேற்கண்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத் துறையால் 2024ஆம் ஆண்டு வெளியிட்ட விவரங்களின்படி 2023ல் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 9,02,718 எனவும் 2024ஆம் ஆண்டைப் பொறுத்தவரை 6.2 சதவீதம் குறைந்து 8,46,709 குழந்தைகளே பிறந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைப் பிறப்பு விகிதம் (TFR) நம் மாநிலத்தைப் பொறுத்தவரை 2011-15ஆம் ஆண்டில் 1.68லிருந்து 2021-25 காலகட்டத்தில் 1.54 ஆக குறைந்துள்ளது.
அட்டவணை -2ல் தெரிவிக்கப்பட்டவாறு மாணவர் சேர்க்கை நிகழாத பள்ளிகளில் சுமார் 72 சதவீதம் பள்ளிகள் சுயநிதிப் பள்ளிகளாகும். அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்ற எந்தவித வேறுபாடும் இல்லாமல் மாணவர் சேர்க்கை குறைவிற்கு தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவே மிக முக்கிய காரணம் ஆகும். மேலும் மேற்கண்ட 207 பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை தேவை ஏற்படின் மீளவும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் பள்ளிகள் மூடப்படுவது என்பது அரசின் நோக்கமல்ல என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்ட பள்ளிகள் பெரும்பாலும் கிராம மற்றும் தொலைதூர பகுதிகளில் அமைந்துள்ளவை ஆகும். மேற்கண்ட பள்ளிகள் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் பள்ளியில் சேரும் தகுதியான வயதில் 5+ல் குழந்தைகள் யாரும் இல்லை. கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், ஊத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 2025-26 நடப்புக் கல்வியாண்டில் ஜுன் மாதம் சேர்ந்த 4 மாணவர்களின் பெற்றோர்கள் இடம்பெயர்ந்ததனால் எல்லை மேட்டுப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 3 மாணவர்களும் சின்னதாராபுரம் ஆர்.சி.உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் மற்றொரு மாணவியும் இடைநிற்றலின்றி சேர்ந்து பயின்று வருகின்றனர் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தனிநபர் பொருளாதார வளர்ச்சி அதிகரித்ததன் காரணமாகவும் தங்களின் பிள்ளைகள் தனியார் பள்ளியில் சேருவதை பெருமையாக ஒருசில பெற்றோர்கள் கருதுவதாலும் தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தி ஆங்கில வழிக் கல்வியை தொடர்கின்றனர்.
தமிழ்நாட்டில் கிராமப்புறப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் தங்களின் வேலை வாய்ப்புக்காக நகர்புறம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு குடும்பத்துடன் இடம்பெயர்கின்றனர். அதனால் அரசுப் பள்ளிகளில் சேர்க்கையாகி பயின்று வந்த மாணவர்கள் பெற்றோர்களுடன் புதிய வசிப்பிடத்திற்கு குடிபெயர்கின்ற காரணத்தால்
2
cckkalviseithikal
இப்பள்ளிகளில் சேர்க்கையான மாணவர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து மாணவர் இல்லாத நிலையினை அடைந்துள்ளது.
நடப்புக் கல்வியாண்டில் இந்நாள் வரை 4,07,379 மாணவர்கள் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். மேலும் அரசின் கீழ்க்கண்ட சிறப்பு முயற்சிகளினால் கூடுதலான மாணவர்கள் புதிதாக ஈர்க்கப்பட்டுள்ளனர்.
அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகளும் (Smart Class Room) அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்களும் (Hi-Tech Lab) ஏற்படுத்தப்பட்டுள்ளமை
c அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தியமை
அரசுப் பள்ளிகளில் அவ்வவ்போது ஏற்பட்ட ஆசிரியர் காலிப் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக அக்காலிப் பணியிடங்களை நிரப்பி அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை என்ற நிலையை மாற்றி கற்றல் - கற்பித்தல் செயல்பாட்டை மாணவர்களுக்கு வழங்கியமை
c பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டமை
0 எளிமையான புரிதலை ஊக்குவிக்கும் வகையில் அமைந்த எண்ணும் எழுத்தும் திட்டம்
× 100 நாட்களில் மாணவர்களின் மொழிப் பாடத்திறன் மற்றும் கணித அடிப்படைத் திறனை வளர்த்தலுக்கு ஆசிரியர்களை சவாலாக ஏற்று செயல்பட வைத்தமை
கலைத் திருவிழாவில் தொடக்கப் பள்ளி மாணவர்களையும் ஆர்வமுடன் பங்கேற்க ஊக்குவிக்கப்பட்டமை மற்றும் சிறப்பான பங்களிப்பினை நல்கிய மாணவர்களை வெளிநாடு மற்றும் உள்நாடு சுற்றுலாவிற்கு அழைத்து சென்றமை
தற்போதைய EMIS புள்ளி விவரங்களின்படி தனியார் பள்ளிகளைக்காட்டிலும் 1,75,660 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்து பயின்று வருகின்றனர். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 61,49,337 மாணவர்களும் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 59,73,677 மாணவர்களும் பயின்று வருகின்றனர்.
மேலும் வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கையிலும் சேர்க்கையான மாணவர்களை தக்க வைப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
தொடக்கக் கல்வி இயக்குநர்
0 Comments