பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 09.01.2025 வியாழக்கிழமை.
திருக்குறள்:
பால் :பொருட்பால்
அதிகாரம்:மருந்து
குறள் எண்:947
தீயளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின்
நோயளவு இன்றிப் படும்.
பொருள்:
செரிக்கும் பசியளவு அறியாமல் மிக உண்பானாயின், அவனிடம் நோய் அளவின்றி வரும்.
பழமொழி :
அதிகாரம் ஆளை அடையாளம் காட்டும்.
Authority shows the man
இரண்டொழுக்க பண்புகள் :
* எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எனவே, நான் எண்களின் நான்கு அடிப்படைச் செயல்பாடுகளையும், தமிழ், ஆங்கில எழுத்துக்களையும் நன்கு கற்றுக்கொள்வேன்.
*பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும் என்னால் முடியும். நான் கற்றுக்கொள்வேன்.
பொன்மொழி :
இளமையில் கல்வியை புறக்கனித்தவன் இறந்த காலத்தை இழந்தவன், எதிர்கால வாழ்விலும் இழந்தவன் ஆகிறான்
பொது அறிவு :
1. அதிகமாக தேசம் விட்டு தேசம் செல்லும் பறவை எது?
ஆர்க்டிக் என்னும் கடற்பறவை.
2. மிக அழகான இறக்கைகளை உடைய பறவை எது ?
சொர்க்கப் பறவை.
English words & meanings :
Martial arts. - தற்காப்புக் கலை
Running. - ஓடுதல்
வேளாண்மையும் வாழ்வும் :
நிலத்தடி நீரை எடுத்து உபயோகப் படுத்திய அளவுக்கு நீரை சேமிக்க அல்லது சிக்கனமாக செலவழிக்க முன்வரவில்லை. விளைவு உலக அளவில் பரவலாக நீர் தட்டுப் பாரடு ஏற்பட்டது
ஜனவரி 09
NRI Day - வெளிநாடுவாழ் இந்தியர் நாள்
வெளிநாடுவாழ் இந்தியர் நாள், 2003 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவைத் தவிர்த்த பிற நாடுகளில் வாழும் இந்தியர்களின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த நாளின் (ஜனவரி 9, 1915) நினைவாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்திய நகரத்தில் இவ்விழா கொண்டாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவின்போது, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
நீதிக்கதை
ஒரு ரூபாய்
முன்னொரு காலத்தில் ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு நகரத்தில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் ஒரு ரூபாய் காசு கீழே கிடந்தது. அவர் அந்த ரூபாயை ஒரு ஏழைக்கு கொடுக்க நினைத்தார்.
அவர் போகும் வழியில் அவரால் எந்த ஏழையையுமே பார்க்க முடியவில்லை . அதனால் அந்த ரூபாயை அவரே பத்திரமாக வைத்துக்கொண்டார். அப்படியே இரண்டு நாட்கள் கடந்தது. ஒருநாள் முனிவர், அவரது வீட்டை விட்டு வெளியே வரும் போது ஒரு ராஜா பேராசையோடு ராணுவத்துடன் இன்னொரு நாட்டுக்கு சண்டை போட சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த ராஜா முனிவரை பார்த்ததும் தான் இன்னொரு நாட்டுக்கு சண்டை போட போவதாகக் கூறி அவரிடம் தான் வெற்றி பெற ஆசீர்வாதம் கேட்டார். ராஜா அவ்வாறு கேட்ட பின் முனிவர் சிறிது நேரம் யோசித்து, ராஜாவுக்கு அந்த ஒரு ரூபாயை கொடுத்தார்.
உடனே ராஜாவுக்குக் கோபம் வந்தது. ராஜா முனிவரை பார்த்து “எனக்கு எதுக்கு ஒரு ரூபாய் கொடுத்தீர்கள்?” என்று கேட்டார். முனிவர் “நான் நகரத்தில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் இந்த ஒரு ரூபாயை பார்த்தேன். இதை ஒரு ஏழைக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தேன்.ஆனால் எவ்வளவு தேடியும் என்னால் ஒரு ஏழையைக் கூட இதுவரைக்கும் கண்டு பிடிக்க முடியவில்லை.கடைசியாக கண்டுபிடித்துவிட்டேன்" என்றார்.
அதற்கு ராஜா “நான் பணக்காரன் என்னிடம் நிறைய பணமும், நிலங்களும் இருக்கிறது . ஆனால் நீங்கள் என்னை ஏன் ஏழை என்று கூறினீர்?” என்று கேட்டார்.
அப்போது முனிவர் “உன்னிடம் இவ்வளவு பணம் இருந்தும், பேராசையுடன் இன்னொரு நாட்டை கைப்பற்ற போகிறாய்.
உன்னை விட ஒரு ஏழையை என்னால் பார்க்க முடியாது. அதனால் தான் உனக்கு இந்த ஒரு ரூபாயை கொடுத்தேன்” என்றார்.
ராஜா தன்னுடைய தவறை உணர்ந்து தான் பேராசை மனதை நினைத்து ரொம்ப கஷ்டப்பட்டு முனிவரிடம் மன்னிப்பு கேட்டார்.
இன்றைய செய்திகள்
09.01.2025
* பொங்கல் பரிசுத்தொகுப்பு ரெடி... நாளை முதல் ரேஷன் கடைகளில் விநியோகம்!
* ஸ்ரீஹரிகோட்டா: கடந்த டிச.,30ல் விண்ணில் செலுத்தப்பட்ட 220 கிலோ எடை கொண்ட இரு விண்கலன்களை இணைக்கும் நாளைய நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
* டில்லி காற்று மாசு தரத்தில் முன்னேற்றம்: வாகனங்களுக்கான தடை உத்தரவில் தளர்வு.
* இஸ்ரோ தலைவராக திரு. நாராயணன். தமிழ் நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து அரசு பள்ளியில் படித்து உதவியாளர் நிலையில் இஸ்ரோவில் சேர்ந்தவர் இன்று அதன் தலைவராகி உள்ளார்.
* ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: எப்.சி. கோவா - ஐதராபாத் எப்.சி ஆட்டம் 'டிரா'.
Today's Headlines
* Pongal gift set ready... Distribution in ration shops from tomorrow!
* Sriharikota: ISRO has announced that tomorrow's event to connect two 220 kg spacecraft launched on December 30 has been postponed.
* Improvement in Delhi air pollution levels: Relaxation in vehicle ban.
* ISRO Chairman Mr. Narayanan. Born in a humble background in Kumari district of Tamil Nadu, he studied in a government school and joined ISRO as an assistant and has become its chairman today.
* ISL Football Series: FC Goa - Hyderabad FC match 'Draw'.
Covai women ICT_போதிமரம்
0 Comments