பணி ஓய்வு பெற உள்ளவர்களுக்கான முக்கியக் குறிப்புகள்.

 பணி ஓய்வு பெற உள்ளவர்களுக்கான முக்கியக் குறிப்புகள். 

Click here




பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளவர்களுக்கான மொத்தத் தகவல் தொகுப்பு சார்ந்த பதிவு.


அ) பொதுவான பதிவுகள்



1)ஜனவரி மாதத்தில் ஓய்வு பெற இருப்பவர்கள் இந்த மாதத்திலேயே 12 CL எடுத்துக் கொள்ளலாம்.


2) மறு-நியமனம் பெற உள்ள ஆசிரியர்கள் மறுநியமன காலத்திற்கு மாதத்திற்கு ஒரு தற்செயல்விடுப்பு அனுமதி உண்டு. (பணிக்காலம் மறுநியமன காலம் மொத்தம் ஆண்டிற்கு 12 தற்செயல்விடுப்பு மிக கூடாது.


3) ஓய்வு பெறுவதற்கு முன் ML, EL UEL(PA) எல்லாம் அனுமதி உண்டு. மறு நியமன காலத்தில் ஒரு நாள் தற்செயல்விடுப்பு தவிர எந்த ஒரு விடுப்பும் அனுமதி இல்லை.(கட்டாயம் தேவை எனில் LOP தான்.


4) தனியரின் பிறந்த தேதி 2 ஆம் தேதி முதல் மாதக் கடைசி வரையில் எனில் ஓய்வு பெறும் நாள் அந்த மாதத்தின் கடைசி நாள். எ.கா பிறந்த நாள் 3.5-1965 எனில் ஓய்வு 31-5-2025


5) ஒன்றாம் தேதி பிறந்த நாள் எனில் முந்தைய மாதத்தின் கடைசி நாள் தான அன்னாரின் ஓய்வு பெறும் நாள் .எ.கா 0103.1965 பிறந்த நாள் எனில் ஓய்வு 28.022025


6) CPS (1.4.2003 பின் நியமனம்) பணியாளர்களுக்கு ஓய்வு கால பலன்கள் (CPS/EL/UEL/SPF2000)அன்னார் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தான் துவங்கிட வழங்க இயலும்.


7) GPF பணியாளர்களுக்கு பணியில் இருந்து ஓய்வு பெற நான்கு மாதங்களுக்கு முன் GPF பிடித்தம் நிறுத்தப்பட்ட உடன் கருத்துருக்கள் ஆன்லைன் (OPPAS) வழியாக அனுப்பிட இயலும்.


ஆ) ஓய்வு பெற நான்கு மாதங்கள் உள்ள நிலையில் செய்ய வேண்டியவை.


தற்போது CPS GPF பணியாளர்களுக்கு ஓய்வு கால பலன்கள் பெற கருத்துருக்கள் ஆன்லைன் வழியாகத் தான் அனுப்பப்படுகிறது.

ESR Part I and Part Il update ஆக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக பெயர், பிறந்த தேதி, பணி

ஏற்பு நாள், CPS GPF எண் சரியாக இருக்க வேண்டும்.

தங்களின் புரிதலுக்கு ESR Part I என்பது. IFHRMS வந்த புதிதில் நமது விவரங்கள் உள்ளீடு செய்யப்பட்டது பணித் பதிவேட்டில் ID என்ற முத்திரை குத்தப்பட்டு இருக்கும். 31.12.2021 வரை தகவல்கள் அதில் இருக்கும். 


Profile page எனப்படும் SR front page தகவல்கள் சரி செய்ய Ticket Id தான் போட வேண்டும். பிற தகவல்களை நாமே சரி செய்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments