Baseline & Endline Assessment online Training முடிக்க கால நீட்டிப்பு செய்து SCERT இணை இயக்குநர் உத்தரவு

LMS - Baseline & Endline Assessment online Training முடிக்க கால நீட்டிப்பு செய்து SCERT இணை இயக்குநர் உத்தரவு.

Click here

 Baseline & Endline Assessment online Training 10.01.2025க்குள் முடிக்க SCERT இணை இயக்குநர் உத்தரவு.




பார்வையில் காணும் வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளின்படி, 2024 2025 ஆம் கல்வியாண்டில் சிறப்பு தேவையுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வியின் மூலம் முறையான கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கட்டகம் உருவாக்கப்பட்டும், அதனை மதிப்பீடு செய்தும் (Assessment) உள்ளடக்கிய கல்வி பற்றி ஆசிரியர்கள் அறிந்திடும் வகையில் LMS தளத்தின் மூலம் பதிவேற்றம் மேற்கொள்ளப்பட்டு, இணைய வழி வாயிலாக EMIS தளத்தின் வழியே 14.122024 முதல் அனைத்து மாவட்டங்களில் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் காணொலி மூலம் இபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

மேற்படி இக்காணொலிப்பயிற்சியினை ஆசிரியர்கள் 10.012025-க்குள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

எனவே, மாநிலம் முழுவதும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கையாளும் அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களுக்கு LMS வழியாக பயிற்சி அளிக்கப்படும் நிலையில், இப்பயிற்சியிணை உரிய காலத்தில் மேற்கொள்ள அறிவுறுத்திடுமாறும், இப்பயிற்சி முடிவுற்ற பின்னர் முன்னேற்ற அறிக்கை விவரத்தினை இந்நிறுவன tnscertjd3@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


Post a Comment

0 Comments