ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் நிர்ணயிக்க வழக்கு. அறிக்கை அளிக்க உத்தரவு.
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி தமிழகத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு மாணவர், ஆசிரியர் விகிதத்தை நிர்ணயிக்க தாக்கலான வழக்கில் பள்ளிக் கல்வித்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் மீனாட்சி சுந்தரம் தாக்கல் செய்த பொதுநல மனு
தமிழகத்தில் 23 ஆயிரத்து 928 ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகள் 7250 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இயற்றில் பல பள்ளிகளில் போதிய மாணவர்கள் எண்ணிக்கை இல்லை. இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, 180 க்கு மேல் மாணவர்கள் கொண்ட துவக்கப் பள்ளிகள், 100க்கு மேல் மாணவர்கள் உள்ள நடுநிலைப் பள்ளிகளுக்கு (6 முதல் 8வது வகுப்புவரை) பொறுப்பு ஆசிரியர் பணியிடம் அனுமதிக்கப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் மாணவர் ஒன்றிய பொறுப்பு பணியிடம் பள்ளிகளில் ஆசிரியர்கள் சட்டப்படி தேவையற்றது. அவர்களை தேவையான பள்ளிகளில் பணியில் ஈடுபடுத்த வேண்டும். அவ்வாறு செய்யாமல், போதிய மாணவர்கள் இல்லாத அதே பள்ளிகளில் தொடர தமிழக பள்ளிக் கல்வித்துறை அனுமதிக்கிறது.
இதனால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அரசு ரூ.33 கோடி பொறுப்பு ஆசிரியர்களுக்கும் சம்பளமாக வழங்குகிறது.
ஊராட்சி ஒன்றிய பள்ளிகளைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக மாணவர், ஆசிரியர் விகிதத்தை பள்ளிக் கல்வித்துறை நிர்ணயிக்கவில்லை. சட்டத்திற்கு புறம்பாக பொறுப்பு ஆசிசியர்களை தொடர அனுமதிக்கிறது. இலவச கட்டாயகல்வி உரிமை சட்டப்படி
ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் விகிதத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை நிர்ணயிக்க வேண்டும்.
கூடுதலாக உள்ள பொறுப்பு ஆசிரியர்களை தேவையான ஒன்றிய பள்ளிகளில் பணியில் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும்.
நீதிபதிகள் ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், துவக்கக் கல்வி இயக்குநர்ஆகியோர் டிசம்பர் 17 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
0 Comments