அரசுப்பள்ளியில் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய வட்டாரக்கல்வி அலுவலர்.
ஆம்பூர் அடுத்த மணியாரகுப்பத் தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நேற்று தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய வட்டார கல்வி அலுவல ரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைர லாக பரவி வருகிறது.
மாதனூர் ஊராட்சி ஒன்றியம் மணியார குப்பம் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய துவக் கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மணியாரகுப்பம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சார்ந்த பல்வேறு குக்கிராமங் களை சேர்ந்த மாணவ, மாணவியர் கல்விபயின்று வருகின்றனர். மாதனூர் வட்டார கல்வி அலுவல ராக உதயசங்கர் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந் நிலையில் நேற்று இவரது பிறந்த நாளை ஒட்டி மணி யாரகுப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே வாழ்த்து பேனர் வைக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து அப் பள்ளிக்கு நேற்று வருகை தந்த வட்டார கல்வி அலுவலர் உதயசங்கருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் சார்பில் மலர்மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் னர், பள்ளி நேரத்தில் மாணவர்கள் முன்னிலை யில் அவருக்கு சால்வை அணிவித்து ஆசிரியர்கள் கவுரவித்தனர். பின்னர், கேக் வெட்டிய உதயசங்கர் அருகில் இருந்த ஆசிரிய ருக்கு ஊட்டி மகிழ்ந்தார். பதிலுக்கு அந்த ஆசிரிய ரும் கல்வி அலுவலருக்கு கேக்கை ஊட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்ப டுத்தினார்.
இதை அங்கு வகுப்ப றையில் இருந்த மாணவர் கள் எழுந்து நின்ற படி ஏக்கமாக பார்த்தனர். இதை தொடர்ந்து தடபுடல் விருந்து கல்வி அலுவல ருக்கு பள்ளி சார்பில் வழங் கப்பட்டது. இந்த நிகழ்ச் சியின் புகைப்படங்கள் நேற்று மாலை திருப்பத் தூர்மாவட்டத்தில் உள்ள பல்வேறு சமூக வலை தள குழுக்களில் பகிரப்பட்டு வைரலானது. கல்வியா ளர்கள் உள்ளிட்ட பலர் அரசு பள்ளியில் மாண வர்களின் கற்றல் நேரத்தை வீணாக்கும் வகையில் விதி முறைகளுக்கு முரணாக கேக்வெட்டி நடந்த கல்வி அலுவலரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை விமர்சித்தும் கண்டனம் தெரிவித்தும் பதிவிட்டு வருகின்றனர்.
0 Comments