தலைமையாசிரியர் கூட்டத்தில் ஆசிரியர்களை ஒருமையில் பேசிய இணை இயக்குநர்! ஆசிரியர்கள் அதிருப்தி!

 தலைமையாசிரியர் கூட்டத்தில் ஆசிரியர்களை ஒருமையில் பேசிய இணை இயக்குநர்! ஆசிரியர்கள் அதிருப்தி!




ஊட்டியில் தொடக்க மற்றும் நடுதிலைப்பள்ளி ஆசிரியர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் ஆசிரியர்களை பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் ஒருமையில் பேசியது ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


புதிய பாரத எழுத்தறிவு இயக்கத்தின் கீழ் வயதானோருக்கு கல்வி கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி கோத்தகிரியில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நேற்று நடந்தது. பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் மற்றும் நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பொன்குமார் பங்கேற்று சான்றிதழ்கள் வழங்கினார்.


தொடர்ந்து ஊட்டி அரசு மேல்நிலை பள்ளியில் ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி வட்டாரங்களைச் சேர்ந்த தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், புதிய பாரத எழுத்தறிவு திட்டத் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். மேலும் மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவ லர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர். 


கூட்டத்தில் பங்கேற்ற பள்ளி கல்வித் துறை இணை இயக்குநர் பொன்குமார், இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களை ஒருமையில் பேசியுள்ளார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்ந்து எவ்வித ஆக்கப் பூர்வமான ஆலோசனைகளையும் வழங்காமல் ஆசிரியர்களை குறை கூறிச் சென்றது, 


கூட்டத்திற்கு வந்திருந்த ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர்களையும், கல்வித்துறை அதிகாரிகளையும் குறித்து பேசியதற்கு ஆசிரியர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளது.


மாவட்ட கண்கா ணிப்பு அலுவலரான இவர், அடுத்த முறை ஆய் விற்கு வரும் இதேபோன்று செயல்பாட்டால் அவரை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் எனவும். அவரது கூட்டத்தை புறக்க ணிக்கவும் முடிவு செய்துள் ளதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments