🖇️STET பயிற்சி வழங்குதல் குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள். Google Sheet & Telegram link

 🖇️STET பயிற்சி வழங்குதல் குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள். Google Sheet & Telegram link.


link
STET link


Click here


தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு (TNTET December 2026)

 வலுவூட்டுதல் பயிற்சிக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOP)


cckkalviseithikal

1. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (டிசம்பர் 2026) வலுவூட்டுதல் பயிற்சியினை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT), சென்னை-6 ஏற்பாடு செய்துள்ளது.

2. இப்பயிற்சியானது இடைநிலை ஆசிரியர்கள் (SGT) தாள்-1 மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் (BT) தாள்-2 ஆகிய தேர்வினை எதிர்கொள்ளத் தயார்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

3. ஆசிரியர்கள் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை எதிர்கொள்ளும் நோக்கில் பள்ளிக் கல்வித் துறையினால் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியே இந்த வழிகாட்டுதல் திட்டமாகும்.

4. இப்பயிற்சியானது வருகின்ற அக்டோபர் 2026 முதல் டிசம்பர் 2026 வரை நடைபெறும்.

5. இந்த வலுவூட்டுதல் பயிற்சித் திட்டம் முழுவதுமாக நேரடி வகுப்புகள் (offline) முறையில் மட்டுமே நடத்தப்படும். நேரடி வகுப்பிற்கு பிறகு சில குறிப்பிட்ட தலைப்புகளில் மட்டும் ஆசிரியர்களின் மீளாய்வு மற்றும் வலுவூட்டுதல் பணிகளுக்காக காணொலி வடிவில் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

6. இப்பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் DIET அல்லது முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) அலுவலகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, மாவட்டத்திற்கு ஒரு பயிற்சி மையம் என்ற அடிப்படையில் மட்டுமே நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.

7. இப்பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும். முன்பதிவு செய்த ஆசிரியர்கள் மட்டுமே இப்பயிற்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

8. பதிவு செய்த ஆசிரியர்கள், அட்டவணையின்படி பயிற்சி மையத்திற்கு உரிய நேரத்தில் வருகை தந்து, பயிற்சியில் பங்கேற்க வேண்டும்..

9. ஆசிரியர்கள் தங்கள் பெயர், வயது, பதவி, EMIS எண், அலைபேசி எண். மின்னஞ்சல் முகவரி, பள்ளி முகவரி, கல்வி ஒன்றியம் மற்றும் மாவட்டம் போன்ற துல்லியமான விவரங்களைப் பதிவு செய்தல் வேண்டும்.

10. மின்னஞ்சல் செய்த முகவரியுடன் வெற்றிகரமாக முன்பதிவு பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்புகளில் கலந்துகொள்வதற்கான கால அட்டவணை, SRC Telegram குழுவின் மூலமாக பகிரப்படும்.

11. ஒரு மாவட்டத்தைச் சார்ந்த ஆசிரியர்கள், பிற மாவட்டங்களில் குறிப்பிட்ட பயிற்சி வகுப்புகளுக்கான இடவசதி இருப்பின், அங்கு நடைபெறும் பயிற்சி வகுப்புகளிலும் கலந்துகொள்ளலாம்.

cckkalviseithikal

12. SCERT / DIET மூலம் நடத்தப்படும் இந்த நேரடி வகுப்புகள் ஒரு வலுவூட்டுதல் மட்டுமே. இவை TET பாடத்திட்டத்தின் முக்கிய தலைப்புகள் குறித்த தெளிவான கருத்தியல் கண்ணோட்டத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

13. இந்த வலுவூட்டுதல் வகுப்புகள் SCERT / DIET ஆல் பரிந்துரைக்கப்பட்ட அந்தந்த பாட வல்லுநர்களால் கையாளப்படும்.

14.வலுவூட்டுதல் அமர்வுகளின்போது, பாட வல்லுநர்களால் எந்தவிதமான குறிப்புப் பொருட்களோ (Reference materials). குறிப்புகளோ கூடுதல் ஆதாரங்களோ பகிரப்பட மாட்டாது.

15.பங்கேற்பாளர்கள் பயிற்சி அமர்வுகளின்போது, தனிப்பட்ட குறிப்புகளை எடுத்துக் கொள்ளவும். அதன் மூலம் சுயப்பயிற்சியைத் தொடரவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

16. இப்பயிற்சியில் உள்ள பாடத்திட்டங்கள் மற்றும் தலைப்புகள் பங்கேற்கும் ஆசிரியர்களின் TET தயாரிப்பிற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

17.இருப்பினும், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் இந்தப் பயிற்சியில் நடத்தப்படும் பாடங்களிலிருந்து மட்டுமே வரும் என்று கருதக்கூடாது.

18.ஆசிரியர்கள் இப்பயிற்சியில் கலந்துகொள்வது மட்டுமல்லாமல், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களை கொண்டு தயாரிப்பை மேலும் தொடர அறிவுறுத்தப்படுகிறார்கள்.

19. ஆசிரியர்கள் இப்பயிற்சி அட்டவணையின்படி சரியான நேரத்திற்கு பயிற்சி மையத்திற்கு வருகைபுரிய வேண்டும்.

20. ஆசிரியர்கள் தங்களது வழக்கமான பள்ளிப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த வாய்ப்பைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments