IFHRMS இல் சொத்து விவரங்களை பதிவு செய்வது மறு உத்தரவு வரும் வரை ஒத்தி வைக்கப்படுகிறது - நீதிபதி

 IFHRMS இல் சொத்து விவரங்களை பதிவு செய்வது மறு உத்தரவு வரும் வரை ஒத்தி வைக்கப்படுகிறது - நீதிபதி


Assets-Judge
IFHRMS-ASSETS


முதன்மை நீதிபதி மாநகர உரிமையியல் நீதிமன்றம், சென்னை அவர்களின் சுற்றறிக்கை விவரம் 👇 


cckkalviseithikal

பொருள்:

நிர்வாகப் பிரிவு மாநகர உரிமையியல் நீதிமன்றம், சென்னை - தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள், 1973 விதி 7(3)-ன் கீழ் அசையும் மற்றும் அசையா சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த வருடாந்திர அறிக்கை சமர்ப்பித்தல் திருத்தங்கள் அறிவிக்கப்பட்டது உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் வழங்குதல் தொடர்பாக.


1. dated 30.09.2026 Dis.No.12616/T1/2026/E3

2. சென்னை உயர் நீதிமன்ற R.O.C.No. 86792/2026/C2 தேதி | 15.10.2026


தமிழ்நாடு அரசு, மனிதவள மேலாண்மைத் துறையின் அரசாணை எண் 7, நாள் 09.01.2026-ன்படி, தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள், 1973-ன் விதி 7(3)-ல் திருத்தம் செய்து அரசின் கடித எண்.5568/A1/2026-1, நாள் 05.08.2026-ன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கையை 31.10.2026-க்குள் அனைத்து அரசு ஊழியர்களும் IFHRMS இணையதளம் வாயிலாக ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.


அதன்படி டிஸ்.எண்.12616/டி 1/2026 நாள் 30.09.2026 அன்று நமது மாநகர உரிமையியல் நீதிமன்ற சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. பார்வை 2-ல் கண்டுள்ள மாண்புமிகு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழ்நாடு மாநில நீதித்துறைப் பணியில் உள்ள நீதித்துறை அலுவலர்கள், சென்னை உயர்நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தமிழ்நாட்டிலுள்ள மாவட்ட நீதித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் IFHRMS இணையதளம் வாயிலாக சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கை சமர்ப்பிப்பது மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை இந்த சுற்றறிக்கையின் மூலம் நீதித்துறை ஊழியர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தப்படுகிறது.


இந்தச் சுற்றறிக்கையின் வாயிலாக சொத்து விவரங்களை பதிவு செய்ய வேண்டாம் என நீதித்துறை ஊழியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments