💰IFHRMS இல் சொத்து விவரங்களை பதிவு செய்தல் குறித்து கருவூலத்துறையின் விளக்கக் குறிப்பு

 💰IFHRMS இல் சொத்து விவரங்களை பதிவு செய்தல் குறித்து கருவூலத்துறையின் விளக்கக் குறிப்பு. 


தற்போது உயர் அலுவலர்கள் மட்டும் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

கீழ்நிலை அலுவலர்கள் குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

Click here

IFHRMS-ASSETS
IFHRMS assets 


சொத்து மற்றும் கடன் விவர ஆண்டு அறிக்கை IFHRMS வழியாக சமர்ப்பித்தல்



அறிமுகம் மற்றும் பின்னணி


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள், 1973 - விதி 7(3)-ல் கொண்டுவரப்பட்டுள்ள புதிய திருத்தம்.

அரசாணை (நிலை) எண்.7, மனிதவள மேலாண்மை (A) துறை, நாள்: 09.01.2026.

அரசுப் பணிகளில் வெளிப்படைத்தன்மை (Transparency) மற்றும் பொறுப்புடைமையை (Accountability) அதிகரிப்பதுடன், நேர்மையான நிர்வாகத்தை உறுதி செய்தல்.

முன்பு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டது; இனி அனைத்து அரசு ஊழியர்களும் ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும்.

காகிதப் படிவ முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, இனி IFHRMS இணையதளம் வழியாக ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

பழைய 5 தனித்தனி படிவங்களுக்குப் பதிலாக, பகுதி I, II, III கொண்ட ஒரே புதிய ஆண்டு அறிக்கை படிவம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய கால வரம்புகள் (Important Deadlines)


முதல் ஆன்லைன் அறிக்கை (31.12.2025 நிலவரம்): கடைசி நாள் 31.10.2026.

அடுத்த ஆண்டு அறிக்கை (31.12.2026 நிலவரம்): கடைசி நாள் 31.03.2027.

தொடர் ஆண்டுகள்: ஒவ்வொரு ஆண்டும், அதற்கு அடுத்த ஆண்டு மார்ச் 31-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

புதிய நியமனங்கள்: நேரடி நியமனம் பெற்றவர்கள் பணியில் சேர்ந்த 3 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

> உத்தியோகபூர்வ ஆய்வு: 

அறிக்கை பெற்ற 2 மாதங்களுக்குள் உரிய அதிகாரி சரிபார்க்க வேண்டும்.

யாரெல்லாம் தகுதியானவர்கள்:

 அகில இந்தியப் பணி அலுவலர்கள் (All India Service Officers) தவிர, அனைத்து தமிழ்நாடு அரசு ஊழியர்களும் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

சொத்து இல்லாதவர்கள்: "எந்தச் சொத்தோ அல்லது கடனோ இல்லாதவர்களும்" பூஜ்ஜிய (Nil) அறிக்கை சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.

அறிக்கையின் முக்கிய 3 பகுதிகள்


அசையாச் சொத்துகள் (Immovable Properties): நிலம், வீடு, அடுக்ககக் குடியிருப்பு (Flat) போன்றவை.

> அசையும் சொத்துகள் (Movable Properties): ரொக்கம், நகை, வாகனங்கள், வங்கி வைப்புத்தொகை, முதலீடுகள், காப்பீடு போன்றவை.

கடன்கள் மற்றும் பொறுப்புகள் (Debts & Liabilities): அரசு மற்றும் இதர நிறுவனங்களிடம் பெற்ற கடன்கள்.

விலக்கு: குடும்ப உறுப்பினர்கள் தங்களது சொந்த நிதி ஆதாரத்தில் வாங்கிய

சொத்துகளைக் காட்டத் தேவையில்லை.

சேர்க்கத் தேவையில்லாதவை:


> ஊழியரின் 3 மாத ஊதியத்திற்கு மிகாத தனிநபர் கடன்கள்.

> ஊதிய முன்பணம் மற்றும் பயணப்படி முன்பணம்,

GPF முன்பணம், ஆயுள் காப்பீடு மற்றும் FD மீதான கடன்கள்.

சமர்ப்பிப்பின் முக்கிய விளைவுகள்


> சொத்து விவர அறிக்கை சமர்ப்பித்த நாள் ஊழியரின் ACR-ல் பதிவு செய்யப்படும்.

> பதவி உயர்வுக்கான பெயர்ப் பட்டியல் (Panel) தயாரிக்கும் போது இந்த அறிக்கை முக்கியமாகக் கருதப்படும்.

> ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்டாலும், இவ்விவரங்கள் தொடர்ந்து ரகசிய ஆவணமாகவே கையாளப்படும்.

லஞ்ச ஒழிப்பு விசாரணை அல்லது தேவைப்படும் பட்சத்தில், உரிய அதிகாரி எப்போது வேண்டுமானாலும் ஊழியரின் முழு நிதி ஆதாரத்தைக் கோரலாம்.

IFHRMS-ல் சமர்ப்பிக்கும் வழிமுறை


HRMS இணையதளத்தில் லாகின் (Login) செய்யவும்.

➤ Employee Self Service Property Filing → Apply ក់ គ្រប់

செய்யவும்.

➤ Form I, Form II, Form III முழுமையாக நிரப்பவும்.

> "மாற்றமில்லை" அல்லது "முந்தைய ஆண்டைப் போல" என்ற சொற்களைப் பயன்படுத்தக் கூடாது; முழு விவரங்களையும் உள்ளிட வேண்டும்.

Review & Submission பக்கத்தில் விவரங்களைச் சரிபார்த்து, Declaration-ஐ உறுதிசெய்து சமர்ப்பிக்கவும் (சமர்ப்பித்த பின் திருத்த முடியாது).

சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையைப் பதிவிறக்கம் (Download) செய்து பாதுகாப்பாக வைக்கவும்.

Post a Comment

0 Comments