💥தீபாவளிக்கு அடுத்த நாள் 09.11.2026 விடுமுறை தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 💥தீபாவளிக்கு அடுத்த நாள் 09.11.2026 விடுமுறை தமிழ்நாடு அரசு அறிவிப்பு.


தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம் பின்வருமாறு 👇 

Click here

Leave-
Deepavali leave


cckkalviseithikal

விடுமுறை தீபாவளி பண்டிகை 08.11.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தீபாவளிக்கு அடுத்த நாள் 09.11.2026 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.


பொது (பல்வகை)த் துறை

அரசாணை (1டி) எண்.547

நாள். 28.10.2026 பராபவ வருடம், ஐப்பசி-11 திருவள்ளுவர் ஆண்டு-2057


படிக்க:

1. அரசாணை (நிலை) எண்.154. பொது(பல்வகை)த் துறை, : 03.09.2009.

2. அரசு கடித எண்.8585/பல்வகை/2013-7. பொது (பல்வகை)த் துறை. நாள்: 21.02.2014.

3. அரசாணை (நிலை) எண்.581, பொது(பல்வகை)த் துறை, श्री 17.10.2025.

4. பலதரப்பிலிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள்.

Leave
Deepavali leave 


ஆணை:

இவ்வாண்டு, 08.11.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று விழாவினை மகிழ்வுடன் கொண்டாடி திரும்புவதற்கு ஏதுவாக, 09.11.2026 திங்கட்கிழமை அன்று ஒருநாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு பலதரப்பிலிருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.


2. அக்கோரிக்கைகளை, அரசு கவனமுடன் பரிசீலித்து, தீபாவளிக்கு அடுத்த நாளான 09.11.2026 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள். கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து, 


அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 28.11.2026 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது.


3. மேற்கண்ட உள்ளூர் விடுமுறை நாளானது. செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881)-என்பதால், அவசர அலுவல்களை மேற்கொள்ளும் பொருட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருவூலங்கள். சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படுவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



Post a Comment

0 Comments