💫cckkalviseithikal💫 🌀ஆசிரியர் குறைதீர் முகாம் (Grievance Day) மனுக்கள் மீது 5 நாட்களில் நடவடிக்கை எடுக்க உத்தரவு

💫cckkalviseithikal💫
🌀ஆசிரியர் குறைதீர் முகாம் (Grievance Day) மனுக்கள் மீது 5 நாட்களில் நடவடிக்கை எடுக்க உத்தரவு.

Click here

CCK Grievance Day 


🌀தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-06

Б.Б. отобот: 010536/11/2026, : .06.2026

பொருள்:

தமிழ்நாடு தொடக்கக் கல்வி - ஆசிரியர்கள் குறைதீர் முகாம் தொடக்கக்கல்வி இயக்கக்கத்தின் கட்டுபாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியிம் ஆசிரியர்களுக்கு சேர வேண்டிய பணி பணப்பலன்கள் சார்ந்த பணிகள் உரிய நேரத்தில் பெற அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க சிறப்பு ஆசிரியர் குறை தீர்க்கும் முகாம் நடத்துதல் - தொடர்பாக /


பார்வை:

1. அரசாணை(டி)

:385

பள்ளிக்கல்வித்(இ1) துறை

: 02.11.2012

2. சென்னை-06. தொடக்கக்கல்வி இயக்கக செயல்முறைகள்

ந.க.எண்:002542/டி மற்றும் இ/2025, நாள்: 02.2025

CCK Grievance Day 



பார்வை (1) மற்றும் (2)-இல் காணும் அரசாணை மற்றும் தொடக்கக்கல்வி இயக்கக செயல்முறைகளின்படி தொடக்கக்கல்வி கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வட்டாரக்கல்வி அலுவலங்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலங்களில் (தொடக்கக்கல்வி) ஆசிரியர்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாமினை கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் நடத்திட அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு(தொடக்கக்கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள். 

மேலும் இம்முகாமினை எவ்வித புகாருக்கும் இடமின்றி நடத்திட வட்டாரக்கல்வி அலுவலங்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலங்களில்(தொடக்கக்கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


சிறப்பு முகாம்

(ஒவ்வொரு மாதமும்)

ஒவ்வொரு மாதமும் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் 

ஆசிரியர் குறைதீர் முகாம் நடத்தப்பட வேண்டிய நாள்

பிரதி மாதம் முதல் சனிக்கிழமை



ஒவ்வொரு மாதமும் மாவட்டக்கல்வி அலுவலகத்தில்(தொடக்கக்கல்வி)


ஆசிரியர் குறைதீர் முகாம் நடத்தப்பட வேண்டிய நாள்

பிரதி மாதம் 3 வது சனிக்கிழமை


வட்டாரக்கல்வி அலுவலர்கள் மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) தங்கள் அலுவலகத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது 5 வேலை நாட்களுக்குள் உரிய தீர்வு காணுமாறு தெரிவிக்கப்பப்படுகிறது.

மேலும் இதற்காக தனியாக ஒரு பதிவேடு ஒவ்வொறு அலுவலகத்திலும் பராமரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சிறப்பு குறைதீர்க்கும் நாளில் பெறப்படும் விண்ணப்பங்களை பதிவு செய்யும் பதிவேடு மாதிரி பதிவேடு கீழ்கண்டவாறு.

அலுவலகத்தின் பெயர்

வருவாய் மாவட்டம்


கோரிக்கை மனு அளித்த ஆசிரியர் விவரம்(பெயர், பதவி, பணிபுரியும் பள்ளி)

கோரிக்கை விவரம் (சுருக்கமாக)

கோரிக்கை தீர்வு செய்த விவரம்

(சுருக்கமாக)

-தொடக்கக் கல்வி இயக்குநர்.


Post a Comment

0 Comments