வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ள ஆசிரியர்களுக்கு நிபந்தனையின் அடிப்படையில் பணியில் சேர மாவட்டக் கல்வி அலுவலர் அனுமதி.
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் சம வேலைக்கு சமஊதியம் கோரி 05.012026 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட இடைநிலை ஆசிரியர்கள் வேலைநிறுத்த்திலிருந்து விலகி மீள பணியில் சேர அனுமதி கோரி பார்வை (5)இல் காணும் கடிதத்தில் கண்டுள்ளவாறு சார்ந்த ஆசிரியர்கள் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
கீழ்க்காணும் ஆசிரியர்கள் பார்வை (1)இல் தெரிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் நெறிமுறைகள் மீறப்பட்டுள்ள நிலையில் நிலையில் பார்வை (2)இல் தெரிவித்துள்ள நடத்தை விதிகளுக்கு எதிராக வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மீள பணியேற்க அனுமதி கோரும் நிகழ்வில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் சார்ந்த ஆசிரியர்கள் மீது பார்வை (3) மற்றும் (4)இல் காணும் சென்னை-06, தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைய வழிக்கூட்டம் மற்றும் செயல்முறைகளில் தெரிவித்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றிட தெரிவித்து ஆசிரியர்கள் மீள பணியேற்க அனுமதி வழங்கப்படுகிறது.
cckkalviseithikal
ஆசிரியர்கள் பள்ளியில் பணியேற்ற விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்களுக்குத் தெரிவிக்கலாகிறது.

0 Comments