ஆன்லைனில் பயிற்சி நடத்தியாச்சு, நேரடிப் பயிற்சி எதற்கு? எண்ணும் எழுத்தால் ஆசிரியர்களுக்குத் தொல்லை.
கல்வித்துறையில் 'எண்ணும் எழுத்தும்' திட்டம் சார்பில் ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் அளித்த பயிற்சியை நேரடி பயிற்சி வகுப்புகளாகவும் நடத்த உத்தரவிட்டுள்ளதால் கற்பித்தல் பணி பாதிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தொடக்க கல்வி யில் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.
இதன்படி தற்போது இரண்டாம் பருவப் பாடங்களுக்கான பயிற்சி அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆன்லைன் வழியே அக்டோபர் 14 முதல் 25 வரை நடத்தப்படுகிறது.
இதில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். டி.என்.டி.பி., போர்ட்டலில் பதிவேற்றம் செய்யப்பட்ட பயிற்சிக்கான வீடியோக்களையும் ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து பார்வையிடுகின்றனர்.
இந்நிலை யில் ஆன்லை னில் பெற்ற அதே பயிற்சியை ஒன்றியம் வாரியாக அக்., 28, 29, நவ., 5ல் நேரடி பயிற்சி வகுப்புகளிலும் பங் கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் கூறியதா வது: ஆன்லைனில் வழங்கிய அதே பயிற்சியை தான் நேரடி வகுப்புகளிலும் அளிக்க உள்ளனர். ஆன்லைன் பயிற்சியில் 100க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் அளவுள்ள வீடியோக்களை பதிவிறக்கம் செய்து 'நெட் டேட்டாக்களை இழந்தோம். இனி நேரடியாக பயிற்சியில் பங்கேற்றால் கற்பித்தல் நேரத்தை இழப்போம். ஒரே பயிற்சியை ஏன் இரண்டு முறை நடத்துகின்றனர் என தெரியவில்லை. நேரடியாக பயிற்சி வீடியோக்களையும்
நடத்தினால் தான் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்த முடியும் என்பதால் ஆசிரியர்களை இப்படி அலைக்கழிக்கலாமா. ஏற்கனவே 'எமிஸ்' பதிவுகளால் ஆசிரியர்கள் கற்பித்தல் நேரத்தை இழந்து தவிக்கின்றனர். இப்போது இதுபோன்ற பயிற்சிக்காகவும் அலைக் கழித்தால் மாணவர்கள் நலன் பாதிக்காதா. நேரடி பயிற்சி வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.
0 Comments