NMMS தேர்வுக்கு விண்ணப்பித்தல் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவிப்பு.

 NMMS தேர்வுக்கு விண்ணப்பித்தல் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவிப்பு.




அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 600 006


தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு, ஜனவரி -2026


NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION (NMMS)


JANUARY-2026


செய்திக் குறிப்பு


2025-2026-ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், 2026 ஜனவரி மாதம் 10 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு (NMMS) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.


cckkalviseithikal

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித் தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு NMMS தேர்வு அனைத்து வட்டார அளவில் (Block Level) தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 10.01.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான வெற்று விண்ணப்பங்களை 12.12.2025 முதல் 15.12.2025 வரை இத்துறையின் இணையதளம் வழியாக👇

 Click here

  பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் Online கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து, தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 20.12.2025. நீட்டிக்கப்படமாட்டாது.


மேலும், இணையதளத்தில் 👇

Click here

  கூடுதல் விவரங்களை அறியலாம்.


ஓம்/-இயக்குநர்


நாள்: 12.12.2025.


இடம். சென்னை-6.

Post a Comment

0 Comments