உரிமைக்கான போராட்டங்களும் ஊழியர்களின் / ஆசிரியர்களின் மனப்பான்மைகளும்
உரிமை இழந்த ஊழியர்களை சந்தித்து, பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டு எடுப்பதற்காக நடத்தப்படும் போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஓடோடி நோட்டீசையும் அறிக்கைகளையும் அழைப்பிதழ்களையும் வேண்டுகோளையும் விடுத்தும் - கொடுத்தும் வருகிறோம்.
ஆயினும்.....
நிலை:1
போராட்டத்திற்கு அழைக்கும் போது, அறிமுகமே இல்லாத ஒருவரை அணுகுகிற புரிதலோடு சங்க பொறுப்பாளர்களை பார்க்கும் ஊழியர்கள்.
நிலை 2:
முகஸ்துதிக்காக, கொடுக்கிற நோட்டீசை வாங்கி அப்படியே பக்கவாட்டில் வைத்து விட்டு (தன் கோவணம் கழட்டப்படுவது அறியாமல் சிகையலங்காரம் செய்வதை போல) பழங்கதை பேசும் ஊழியர்கள்.
நிலை 3:
அலுவலகப் படிகளை ஏறி இறங்கி மூச்சிரைக்க ஓடி வந்து மேசையின் முன்னாடி நின்று போராட்ட நோட்டீசை கொடுக்கும் போது - வெள்ளந்தியாக, தலைவர்களை பார்த்து "பென்ஷன் கொடுத்துடுவாங்களா? சார்" என்று ஜோசியம் கேட்கும் ஊழியர்கள்.
நிலை 4:
வாருங்கள்! வாருங்கள்!! என அழைத்து அழைத்து பழகி விட்ட போராட்டக்காரர்கள் ~ மீண்டும் நம்பிக்கையை கைவிடாமல் அழைப்பிதழை கொண்டு வந்து உன் அருகில் நிற்கும் பொழுது - "சார் பென்ஷன் எல்லாம் கொடுக்க மாட்டாங்க, வேற ஏதாவது ஒரு GPF அல்லது வேற ஏதாவது ஒரு மாதிரி mixedஆ எல்லாம் இருக்குற மாதிரி கேட்டீங்கன்னா நடக்கும் சார்" என்று குறி சொல்லும் ஊழியர்கள்.
நிலை 5:
வருட கணக்கில் நோட்டீஸ் வாங்கி வாங்கி கொடுத்தவன் தொல்லை தாங்காம போராட்டத்துக்கு வந்து கூட்டத்தின் நடுவில் நின்று நல்லா கும்முனு ஒரு செல்ஃபி எடுத்து குரூப்ல போட்டுட்டு, போற இடம் தெரியாம போற ஊழியர்கள்.
நிலை 6:
அலைபேசியில் தொடர்பு கொண்டோம்!
நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தோம்!
நண்பர்கள் மூலமாகவும் சொல்லி அனுப்பினோம்!
ஆனாலும் எல்லா நேரத்திலும் "ஒரே வேல சார், ஒதுங்கவே முடியல சார், உங்கள மாதிரி எங்களால உண்மையிலேயே சங்க வேல பாக்க முடியாது. நீங்கதான் சார் பென்சன் வாங்கி கொடுக்கனும்" என்று சொல்லும் நுட்பமான வகையரா ஊழியர்கள்.
நிலை 7:
"தலைவர் செயலாளர் என்னை கூப்பிடவே இல்ல, கூப்பிட்டாதாங்க வர முடியும்" என்று விசேசத்துக்கு கூப்பிடாம கோபித்துகொள்ளும் உறவுக்காரர்கள் போல உள்ள ஊழியர்கள்.
நிலை 8:
சந்திக்கும் போதெல்லாம் "சார் ப்ரொபேஷன் டிக்ளராகல - ப்ரமோஷன் பேரு list வந்து இருக்குது சார் - ரிடைட்மென்ட் டேட் பக்கம் வந்துடுச்சு சார்" என்று காரணத்தை மட்டுமே சங்க பொறுப்பாளர்களுக்கு பரிசாக வழங்கும் ஊழியர்கள்.
நிலை 9:
நாம் கூப்பிட்டு யார் வர போறா! நாமாவது போய்ட்டு வருவோம் என்ற புரிதல் கொண்ட ஊழியர்கள்.
நிலை:10
போராட்டம் ஒன்றே தீர்வு.
மாற்றம் ஒன்றே மாறாதது, மற்றவை அனைத்தும் மாறும்.
உரிமைக்கான போராட்டம் தோற்ற வரலாறு உலகில் இல்லை.
யாராலும் முடியாதது நம்மால் நிகழ்த்திக் காட்ட முடியும் என்ற நம்பிக்கை ஊற்றெடுத்து ஓடும் உணர்வோடு எப்போதும் களத்தில் தனக்காகவும் தன் சக தோழனுக்காகவும் நெஞ்சுரத்தோடு நிற்கும் ஊழியர்கள்.
இதில் நீங்க எந்த வகை? மனசாட்சியுடன் பேசுங்கள்.
எதுவாக வேண்டுமானாலும் இருங்க.
ஆனால் இன்று முதல் அனைத்து நிலைகளையும் தாண்டி 10 -வது நிலையில் அடியெடுத்து வைப்போம்!
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கேட்டு சமரசமற்ற உரிமை போர் தொடுப்போம்!
இதில் 10வது வகை ஊழியனாக என்னை வளர்த்தெடுத்த முன்னணி சங்க நிர்வாகிகளுக்கு நான் பெருமிதத்துடன் நன்றி சொல்கிறேன்.
நான் பணியில் சேர்ந்ததே எனக்கு முன்னாள் போராடிய உழைத்த தோழர்களின் தியாகத்தால் பணிநியமனத் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட்டதால்
'நான் அடைகின்ற
அடைந்திருக்கின்ற எல்லா உரிமைகளிலும்
எனது போராட்டமும்
எனது தியாகமும்
எனது பங்களிப்பும்
இருக்கிறது' என்று எண்ணும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
ஒருவேளை பங்களிப்பு ஏதும் செய்யாமல்....
பலனை மட்டும் அனுபவிக்கும் சூழல் ஏற்பட்டால்....
நான் குற்ற உணர்ச்சியில் கூனிகுறுகி போயிருப்பேன்.
படித்ததில் பிடித்தது
நன்றி: எழுதியவருக்கு🙏🤝

0 Comments