TNTET 2025 உத்தேச விடைக் குறிப்புகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

 TNTET 2025 உத்தேச விடைக் குறிப்புகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.



விடைகளை அறிய👇

Click here

ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-06.

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.03/2025, நாள் 11.08.2025- ன்படி 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - I 15.11.2025 அன்றும் தாள்-II 16.11.2025 அன்றும் நடைபெற்றது.


தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I ல் 92412 தேர்வர்கள் தேர்வெழுதினர். தாள் II -ல் 331923 தேர்வர்கள் தேர்வு எழுதினர். தாள் I மற்றும் தாள் II -ற்கான உத்தேச விடைக்குறிப்பு மற்றும் விடைக்குறிப்புகள் மீதான Objection Tracker URL ஆட்சேபணைகள் தெரிவிக்க (https://trbtucanapply.com) शुभவெளியிடப்படுகிறது. உத்தேச விடைக்குறிப்புகளின் மீது ஆட்சேபணைகள் தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் 25.11.2025 முதல் 03.122025 பிற்பகல் 5.30 மணி வரை உரிய ஆட்சேபணையினை பதிவு செய்திடல் வேண்டும்.


ஆட்சேபணைகள் தெரிவிக்கப்படும் விடைக்குறிப்புகளுக்கான சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஏற்கப்படமாட்டாது. தபால் அல்லது பிறவழி முறையீடுகள் அவை நிராகரிக்கப்பட்டதாகக் கருதப்படும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் (Standard Text Books) ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள் (Guides. Notes) ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், பாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது எனவும் அறிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments