School functions
பள்ளிகளில் விழாக்கள், போட்டிகள், இதர நிகழ்ச்சிகள் நடத்துதல் குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
Click here
பள்ளிகளில் கல்வி சார் / கல்வி இணை நிகழ்வுகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்-2024
cckkalviseithikal
குழந்தைகளிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் வெளிக்கொணர்வதே கல்வியின் அடிப்படை நோக்கமாகும். ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஆளுமை அடிப்படையாகவும், திறன்களை குழந்தைகளின் கலைத்திட்ட எதிர்பார்ப்புகளை (Curricular Expectation) நிறைவு செய்திடும் வகையிலும் அனைத்துப் பள்ளிகளின் கல்வி செயல்பாடுகள், கல்வி இணைச் செயல்பாடுகள் அமைந்திட வேண்டும். இதனை அடிப்படையாகக் கொண்டு. பல்வேறு காலகட்டங்களில் மாணவர்கள் பாதுகாப்பு / கல்வி சார் செயல்பாடுகள் குறித்து சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையிலும், நம்முடைய எதிர்கால சமுதாயத்தினை கட்டமைக்கக்கூடிய நமது மாணவச் செல்வங்கள் அனைவரும் முற்போக்கான அறிவியல் பூர்வமான கருத்துக்களையும், வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையிலும், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்தும் நோக்கில், பல்வேறு கல்வி சார் செயல்பாடுகளுக்கான நிலையான ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்குவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டதன் அடிப்படையில் இந்நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
ஆண்டு விழா, விளையாட்டுப் போட்டிகள், சுற்றுலா அழைத்துச் செல்லுதல் மற்றும் இதர நிகழ்ச்சிகள் என அனைத்து நிகழ்வுகளும் இனி வரும் காலங்களில் மேற்கண்ட நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
0 Comments