627 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதல்- இணை இயக்குநர் தகவல்.

 627 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதல்- இணை இயக்குநர் தகவல்.




2024-25ம் கல்வி ஆண்டில் 627 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது என துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையில் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர்களுக்கு நடந்த கலந்தாய்வில், மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் ஆணை பெற்றவர்களின் விபரம், மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் ஆணை வழங்கப்பட்டு விடுவிப்பு வழங்கப்படாததற்கு காரணம் என்ன என்பது உட்பட பல்வேறு தகவல்ளை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சுரண்டை சிவகுருநாதபுரத்தை சேர்ந்த பரமசிவன் கோரியிருந்தார்.


இதற்கு பதிலளித்து தொடக்க கல்வி துணை இயக்குநர் (நிர்வாகம்) மற்றும் பொது தகவல் அலுவலர் அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:


2024-25 கல்வி ஆண்டில் இணைய வழியில் நடந்த போது மாறுதல் கலந்தாய்வில் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெற்ற இடை நிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை 627 பேர்.


          மற்ற கேள்விகளுக்கு மனுதாரர் கோரிய விபரங்கள் வினா வடி வில்ங்குப்பவில்தகவல் அளிக்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments