ஆசிரியரிடம் லஞ்சம் பெற்ற கோவை கருவூல அலுவலர் கைது.

 ஆசிரியரிடம் லஞ்சம் பெற்ற கோவை கருவூல அலுவலர் கைது.



கோவையில் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற செய்யப்பட்டார்.

கோவை நஞ்சுண்டாபுரம் சாலை வெங்கட்ரமணா நகரை சேர்ந்தவர் பி.சிறில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் (60). இவர் கோவை ராம்நகர் அருகே செயல்பட்டு வரும், ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து கடந்த மே 31ம் தேதி ஓய்வு பெற் றார். 

இவர் தனது கிராஜு விட்டி தொகையை பெற, கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கரூவூலத்துறை அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்தார்.

இவரது விண்ணப்பத்தை, அங்குள்ள கல்விப்பிரிவு கண்காணிப்பாளர் டி.ஆர்.ஏ.ராஜா பரிசீலனை செய்தார். அப்போது அவர், "ரூ.2 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால், உங்களது விண்ணப்பம் மீது மேல்நடவடிக்கை எடுப்போம்" எனக்கூறியுள்ளார். 

இதைக்கேட்டு அதிர்ந்து போன ஆசிரியர், அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர், இது பற்றி கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் வகுத்து கொடுத்த திட்டத்தின் படி, ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முன்வந்தார். அந்த ஆசிரியர்.


அதன்படி, ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளுடன் நேற்று கரூவூல துறை அலுவலகம் சென்றார். அங்கு, பணியில் இருந்த கண்காணிப்பாளர் டி.ஆர்.ஏ.ராஜாவிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார். அவர் அதை மேஜை டிராயரில் போட்டு செல்லுமாறு கூறியுள்ளார். 


இதை அங்கு மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை நடத்தினர். பின்னர் டி.ஆர்.ஏ.ராஜாவை பிடித்தனர். அவரிடம் இருந்து லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

Post a Comment

1 Comments

  1. இதே போல் மற்ற மாவட்டங்களில் நடைபெறும் லஞ்ச ஊழல்களையும் கண்டு பிடிக்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற CPS ஊழியர்கள் நிலையினை கருத்தில் கொண்டு கருவூல ஊழியர்கள் லஞ்சம் பெறாமல் அவர்கள் பணப்பலன்களை பெற்று வழங்க வேண்டும்.

    ReplyDelete