டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் - கல்வி அமைச்சர்கள் பேச்சு வார்த்தை விவரம்.

 டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் - கல்வி அமைச்சர்கள் பேச்சு வார்த்தை விவரம்.




31 அம்சக் கோரிக்கைகளில் நிதி சார்ந்த கோரிக்கைகள் நிதி சாராத கோரிக்கைகள் என இரண்டாக பிரித்து விவாதிக்கப்பட்டது 


நிதிசாராத கோரிக்கைகள் சார்ந்து விரைவில் முடிவெடுக்கப்படும். 

நிதி சார்ந்த கோரிக்கைகள் 

தற்போது மாநிலத்தில் நிதி நிலைமை சீராக இல்லாததால் மத்திய அரசு தரவேண்டிய கல்வி நிதியைப் பெற்ற பின்னர் நிதி சார்ந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அதனை ஏற்றுக்கொண்டு கோட்டை முற்றுகைப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம்.


பேச்சுவார்த்தைக்கு அழைத்த கல்வி அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல். கோ.காமராஜ் டிட்டோஜாக் மாநில ஒருங்கிணைப்பாளர். 

பொதுச் செயலாளர், தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி

Post a Comment

0 Comments