ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்.
22.09.2024 அன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்.
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னை திருவல்லிக்கேணி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் 22.09.2024 ஞாயிற்றுக்கிழமை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு. மு. அன்பரசு, திரு. இரா. தாஸ், திரு. சே. பிரபாகரன் ஆகியோர் கூட்டுத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
1. 2024 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் 40 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
2. கடந்த 14.02.2024ல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடன் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்களுக்கு 2021 சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக மீண்டும் வாக்குறுதி அளித்த பின்புலத்தில், தேர்தல் கால வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது.
3. பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, இந்திய இறையாண்மைக்கும் அரசியலமைப்பிற்கும் எதிராக பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளுக்கு விடுவிக்க வேண்டிய நிதியினை விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. அதிலும், குறிப்பாக
👉2023 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சென்னை மற்றும் துாத்துக்குடி-நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பாதிப்பிற்காக ரூ.37902 கோடி நிதியினைக் கோரியபோது, தற்போது வரை வெறும் ரூ.276 கோடி மட்டுமே வழங்கியிருப்பது
👉சென்னைப் பெருநகர இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு நிதியினை வழங்காமல் மறுப்பது
👉ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையினை நடைமுறைப்படுத்த சம்மதித்தால் மட்டுமே, பிஎம்ஸ்ரீ திட்டத்தின் கீழ் நிதியினை விடுவிக்க முடியும் என நிபந்தனை விதித்து
👉தமிழக மாணாக்கர்களின் கல்விக் கனவினை சிதைப்பது.
👉தமிழ்நாட்டில் இந்திய இரயில்வேத் துறையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்களுக்கான நிதியினை 2024-25 ஆம் ஆண்டில் முழுமையாக வெட்டியிருப்பது
போன்று பல்வேறு நிதிப் பகிர்வுகளை தமிழ்நாட்டிற்கு வழங்காமலும் உரிய நேரத்திற்கு விடுவிக்காமலும்
வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை ஜாக்டோ ஜியோ வன்மையாகக் கண்டிக்கிறது. கூட்டாட்சி மரபுகளின்
அடிப்படையில், தமிழ்நாட்டிற்கு உரிய நிதியினை உரிய காலத்தில் வழங்கிட வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்கிறது.
4.0கடந்த மாதத்தில் விருப்ப ஒய்வில் சென்ற திரு. மு. அன்பரசு அவர்கள் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் (பொறுப்பு) திரு. சா. டானியல் ஜெயசிங் மாநில ஒருங்கிணைப்பாளராக இணைக்கப்பட்டார்.
-மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
ஜாக்டோ ஜியோ
0 Comments