BEO மான்விழி - அதிகார அத்துமீறல் - ஆசிரியர் கூட்டணி கண்டிப்பு.

BEO மான்விழி - அதிகார அத்துமீறல் - ஆசிரியர் கூட்டணி கண்டிப்பு.




தற்காலிக EMIS பணியாளர்களைக் கொண்டு அரசு பள்ளி மாணவர்களையும், வகுப்பறையையும் ஆய்வு செய்யும் திருவோணம் BEO திருமதி மான்விழி அவர்கள்.


விதிமுறைகளுக்கு புறம்பாக *அரசுக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதத்தில்* சர்வாதிகாரப் போக்கில் செயல்படும் இவரது செயலை ஒட்டுமொத்த ஆசிரியர்களும் வன்மையாக 


*கண்டிக்கிறோம்...*

*கண்டிக்கிறோம்...*


திருமதி மான்விழி BEO அவர்கள் திருவோணம் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்யும் பொழுது , உடன் *3 தற்காலிக EMIS பணியாளர்களையும்* அழைத்துச்சென்று,


மாணவர்களின் வாசிப்புத் திறன், இரண்டு வரி நோட்டு, நான்கு வரி நோட்டு போன்றவற்றை EMIS பணியாளர்களைக் கொண்டு ஆய்வு செய்வதை *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது..*


BEO உடன் வந்த *EMIS பணியாளர்கள், மிரட்டும் தோணியில் பேசவே*, 


வந்தவர்கள் அதிகாரிகள் என்று நினைத்து, 


அவர்கள் கேட்ட மாணவர்களின் நோட்டுக்களை எல்லாம் ஓடோடி எடுத்துக்கொடுத்த மூத்த தலைமையாசிரியர்கள்.. 


ஆய்வு முடிந்த பிறகு தான் தெரிகிறது, உடன் வந்தவர்கள் புதிதாக பணியமர்த்தப்பட்ட தற்காலிக EMIS பணியாளர்கள் என்று..

இன்று (24.09.24)  திருவோணத்தில் நடைபெற்ற EMIS பணியாளர்களுக்கான *பயிற்சியின் பொழுதும்,*


மாணவர்களின் கையெழுத்து நோட்டு போன்றவற்றை செல்லும் பள்ளியில் EMIS பணியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும், தேவைப்படின் மாணவர்களின் நோட்டுகளை கேட்கும்பொழுது புகைப்படம் எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று BEO திருமதி மான்விழி அவர்கள் கூறியுள்ளார்..


அப்பொழுது பயிற்சியில் இருந்த ஒரு ஆசிரியர், EMIS பணியாளர்களைக் கொண்டு மாணவர்களை ஆய்வு செய்ய யார் அனுமதி அளித்தார்கள் என்று கேட்டதற்கு, 


யார் அனுமதி கொடுக்க வேண்டும்..? 


நான் தான் அதற்கு பொறுப்பு.. 


எனவே நான் தான் அந்த அதிகாரத்தை அவர்களுக்கு கொடுத்தேன் என சர்வாதிகாரப் போக்கில் பதில் அளித்துள்ளார்..


*அவரது இந்த செயல் ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் அவமானப்படுத்தும், இழிவுபடுத்தும், கொச்சைப்படுத்தும் செயலாகவே கருதுகிறோம்..*


திருவோணம் BEO திருமதி மான்விழி அவர்களின் ஆசிரியர் விரோத சர்வாதிகாரப் போக்கினை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிப்பதுடன்


இது தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களிடமும் புகார் அளிக்க உள்ளோம்.


க.மதியழகன்,

மாவட்டச் செயலாளர்,

TNPTF,

தஞ்சாவூர்.

Post a Comment

0 Comments