திட்டமிட்டபடி 10.09.2024 ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப்போராட்டம் நடைபெறும் டிட்டோஜாக் அறிவிப்பு

திட்டமிட்டபடி 10.09.2024 ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப்போராட்டம் நடைபெறும் டிட்டோஜாக் அறிவிப்பு.


File Photo 


      தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) சார்பில் 31 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 10.09.2024  செவ்வாய்க்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தது.

      

இந்நிலையில் தொடக்கக்கல்வி இயக்குநர் திரு.நரேஷ் அவர்கள் 06.09.2024 அன்று  சென்னை DPI வளாகத்தில் காலை 11.30 to 4.30 வரை  ஐந்துமணிநேரம் டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின் 6.9.2024 மாலை 6.30 to 8 மணிவரை  சென்னை தலைமைச்செயலகத்தில் கல்வித்துறை செயலாளர் அவர்கள்  பேச்சுவார்த்தை நடத்தினார்.


     முன்பே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கைகளில் ஆறு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாக கூறி கல்வித்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.


      அரசின் அறிக்கைக்குப் பின்  டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் 7.9.2024 அன்று கூடி அரசின் அறிக்கை பற்றி விவாதித்தது. அறிக்கையில் அரசாணை 243, CPS, இடைநிலை ஆசிரியர் ஊதியம், EL, INCENTIVE என எந்த ஒரு கோரிக்கை பற்றியும் பதிலோ விளக்கமோ இல்லாததால் மீண்டும் தொடக்கக்கல்வி இயக்குநருடன் பேசியதில் நமது கோரிக்கைகள் ஏற்கப்படாததால்  8.9.2024 இன்று  மீண்டும் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் காலை 10 to 1 மணி வரை விவாதித்தனர். 


 ஆசிரியர்களின் நலன் கருதி அரசு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என முடிவெடுக்கப்பட்டது. அந்தவகையில் திட்டமிட்டபடி 10.09.2024 ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் என டிட்டோஜாக் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments