நாம் தேர்தல் பணி செய்ய உள்ள வாக்குச்சாவடியை கண்டுபிடிப்பது எப்படி?

 நாம் தேர்தல் பணி செய்ய உள்ள வாக்குச்சாவடியை கண்டுபிடிப்பது எப்படி?


அனைவருக்கும் தேர்தல் பயிற்சி ஆணையில் டீம் எண் வழங்கப்பட்டுள்ளது. 



அந்த குழு எண்ணை Team Code வைத்து நாம் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடியை‌த் தெரிந்தது கொள்ள முடியுமா?


ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் சுமார் 400 வாக்குச் சாவடிகள் வரை இருக்கும்.


அந்த 400 வாக்குச்சாவடிகளுக்கும் தேவையான 400 (டீம்) குழுக்களும் மற்றும் கூடுதலாக 10% 40 குழுவும் தேர்வு செய்யப்பட்டிருக்கும்.


வாக்குச்சாவடி எண்ணானது ஒன்றில் இருந்து ஆரம்பித்து 400 வரை இருக்கும் தேர்தல் பணிக்கான குழுவின் எண் ஒன்று முதல் ஆரம்பித்து 440 வரை இருக்கும். 


இந்த இரண்டு எண்களும் வெவ்வேறானது எனவே இதை வைத்து நம்முடைய வாக்குச்சாவடியை அறிய முடியாது. 


தேர்தலுக்கு முந்தைய நாள் 18 ஆம் தேதி காலை 7 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் குலுக்கல் முறையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேவையான குழு கம்ப்யூட்டர் மூலம் தேர்ந்தெடுக்கப்படும். 


எனவே தேர்தலுக்கு முந்தைய நாள் தான் நாம் எந்த வாக்குச்சாவடியில் பணியாற்ற இருக்கிறோம் என்பதை அறிய முடியும்.

Post a Comment

0 Comments