வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளித் தலைமையாசிரியர்களின் கவனத்திற்கு.
அனைத்து தலைமை ஆசிரியர்களையும், மதிப்புமிகு ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவுக்கிணங்க கீழ்க்கண்டவற்றை பின்பற்றுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
1.நடுநிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம் , எம் எல் ஏ, எம் பி, மாவட்ட மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்கள் பள்ளிக்கு வழங்கிய பெஞ்ச், டெஸ்க், சேர், பீரோ போன்ற தளவாடங்களில் அவர்களுடைய பெயரோ மற்றும் கட்சியின் பெயரோ தெரியாத வண்ணம் ஒட்டி வைக்க வேண்டும்.
2. பள்ளி வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அரசியல் கட்சித் தலைவர்கள் படங்கள் சின்னங்கள் இருந்தால் மறைக்கவோ அல்லது அதை நீக்கவோ அன்போடு கேட்டுக்கொள்கிறோம் .
3. அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியின் வாக்குச்சாவடிக்கு தேவையான பர்னிச்சர் , கழிப்பறைக்கு தேவையான பக்கெட் மக் போன்ற அனைத்தையும் தங்கள் கிராம அலுவலரிடம் பட்டியல் இட்டு கையொப்பம் பெற்று ஒப்படைக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
4. பள்ளி வளாகம் கழிப்பறை சுற்றுப்புறம் அனைத்தையும் தூய்மையுடனும் போதுமான குடிநீர் வசதியுடன் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்
5. வாக்குச்சாவடி ஒன்றுக்கு 3டெஸ்க் 3 டேபிள் 4 பெஞ்ச் 4சேர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்
6. மற்ற தளவாட சாமானங்களை தங்கள் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
7. வாக்குச்சாவடிக்கு குடிநீர் வசதிக்காக தண்ணீர் ட்ரம் சில்வர் டம்ளர் மற்றும் வேறு ஏதாவது பாத்திரங்கள் தேவைப்பட்டால் சத்துணவு மையங்களில் பெற்று வழங்கலாம், மீண்டும் தேர்தல் முடிந்த பிறகு அவற்றைப் பெற்று சத்துணவு மையங்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.
0 Comments