10.03.2020 க்கு முன்பு உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் ஊக்க ஊதிய உயர்வு கோரி தொடர்ந்த வழக்கு விபரம்.
10 .03 .2020க்கு முன்பாக உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் பெறாதவர்கள் சார்பான வழக்கு நேற்று 05.02.24 சென்னை உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதி இளந்திரையன் அமர்வில் (Court Hall.7) விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் நம் அமைப்பின் சார்பான வழக்கறிஞர் திரு. லஜபதி ராய் அவர்கள் ஆஜரானார்கள். அரசாணை எண்.37 .நாள் . 10 .03 .2020 மற்றும் அரசாணை எண்.116. நாள். 15 .10. 2020.ன் அடிப்படையில் வாதிட்டார். நீதிபதி 2020 முதல் நீங்கள் ஏன் முறையிடவில்லை என்று கேட்டார். 2020 முதல் நாம் கல்வித்துறைக்கு முறையிட்ட விண்ணப்பங்களை எடுத்துச் சொல்லியும் வழக்கை தள்ளுபடி செய்துள்ளார் நீதிபதி அவர்கள் .
(இதே வழக்கிற்காக கடந்த வாரம் திருமதி . நளினி சிதம்பரம் அவர்கள் , அவர்கள் சார்பான வழக்கில் ஆஜாரான போது இதே நீதிபதி தான் இதே காரணத்தை கூறி வழக்கை தள்ளுபடி செய்திருந்தார். அதனால் நம் அமைப்பின் சார்பான வழக்கும் அதே நீதிபதியிடம் சென்று விட்டது).
இந்நிலையில் தற்போது நமது தரப்பு நீதிபதி அவர்கள் உடனே சென்னை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்ய உள்ளார் என்பதை ஆசிரியர் தோழர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நம் அமைப்பின் TNPTF சார்பான ஊக்க ஊதிய உயர்வு வழக்கின் விசாரணை 13.02. 2024 அன்று விசாரணைக்கு வர உள்ளது என்பதையும் மாநில அமைப்பின் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.
சென்னை உயர்நீதி மன்ற வழக்கு எண் MadrasHC WP.2414/2024,WMP.2616/2024,WMP.2618/2024
மதுரை உயர்நீதி மன்ற வழக்கு எண்.MDUBENCHHC- Filing No WMP(MD)/5628/2024 registered as WMP(MD).2278/2024 in WP(MD)/2270/2024 on 01-02-2024 By S.RAJASEKAR VS (Srithar.R VS State of Tamil Nadu).
MDUBENCHHC- Filing No WMP(MD)/6226/2024 registered as WMP(MD).2224/2024 in WP(MD)/2212/2024 on 01-02-2024 By S.RAJASEKAR VS (Sahaya Mary.S VS State of Tamil Nadu,).
0 Comments