இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், காலிப் பணியிடங்களில் தற்காலிக தொகுப்பூதிய நியமன முன்னுரிமை விவரங்கள்

 இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், காலிப் பணியிடங்களில் தற்காலிக தொகுப்பூதிய நியமன முன்னுரிமை விவரங்கள்.








(24.06.22) நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் சிறப்பு அலுவலர் திரு.இளம்பகவத் இ.ஆ.ப. அவர்கள் தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்க வேண்டிய முன்னுரிமைகள் குறித்து சில தெளிவுரைகள் வழங்கினார்.


மேலும் தகுதியுடைய இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் ஒருவர் கூட நியமனத்தில் விடுபட கூடாது எனவும் தெரிவித்தார். மேலும் இத்தெளிவுரைகள் அனைத்து தன்னார்வலர்களுக்கும் சென்றடைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


எனவே அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தங்கள் பள்ளியில் உள்ள தன்னார்வலர்களுக்கு கீழ்க்கண்ட தெளிவுரைகளை தெரியபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.


 தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்க வேண்டிய முன்னுரிமை.


இடைநிலை ஆசிரியர்கள் தற்காலிக நியமனத்தில்


1. D.T.Ed கல்வித் தகுதியுடன் TET  தேர்ச்சி பெற்றுள்ள  இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள்.

2.  D.T.Ed கல்வித் தகுதியுடன் TET தேர்ச்சி பெற்றவர்கள்.

3. D.T.Ed கல்வி‌ தகுதியுடன் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள்


பட்டதாரி ஆசிரியர்கள் தற்காலிக நியமனத்தில்


1. காலிப்பணியிடம் உள்ள குறிப்பிட்ட பாடத்தில் இளங்கலை பட்டத்துடன் B.Ed கல்வித் தகுதியுடன் TET தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள் 


2. காலிப்பணியிடம் உள்ள குறிப்பிட்ட பாடத்தில் இளங்கலை பட்டத்துடன் B.Ed கல்வித் தகுதியுடன் TET தேர்ச்சி பெற்றவர்கள்


3. காலிப்பணியிடம் உள்ள குறிப்பிட்ட பாடத்தில் இளங்கலை பட்டத்துடன் B.Ed கல்வித் தகுதியுடன் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள்


முதுகலை ஆசிரியர் தற்காலிக நியமனத்தில்


1.காலிப்பணியிடம்  உள்ள குறிப்பிட்ட பாடத்தில் முதுகலைப் பட்டத்துடன் B.Ed பட்டம் பெற்று முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள்


2. காலிப்பணியிடம் உள்ள பாடத்தில் முதுகலைப் பட்டடத்துடன் B.Ed பட்டம் பெற்று முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவர்கள்

 

3.காலிப்பணியிடம்  உள்ள பாடத்தில் முதுகலைப் பட்டடத்துடன் B.Ed பட்டம் பெற்ற இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள்.


தகுதியான தன்னார்வலர்கள் ஒன்றியத்தில்  உள்ள எந்த ஒரு காலிப்பணியிடத்திற்கும் விண்ணப்பிக்கலாம்.


ஒவ்வொரு காலிப்பணியிடத்திற்கும் தனித்தனி விண்ணப்பங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பி படிவம் மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதி குறித்தும், காலிப்பணியிடங்கள் விவரம் குறித்தும் ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும்.

Post a Comment

0 Comments