குழந்தை நேயப்பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில , மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் திருச்சியில் மே 1 ஞாயிறு அன்று நடைபெற்றது.
கூட்டத்தில் இது நாள் வரையிலான குழந்தை நேயப்பள்ளிகள் கூட்டமைப்பு செய்த வேலைகளை உற்றுநோக்கி மீளாய்வு செய்யப்பட்டது. அதில் கொரோனா காலத்தில் குழந்தை நேயப் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து தயாரித்த
கொரோனா பேரிடருக்கு முன்,
கொரோனா பேரிடரின் போது,
கொரோனா பேரிடருக்குப் பின்
அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன ? என தயாரித்த விரிவான அறிக்கையில்...
அரசு பள்ளிக்கல்வியில் செய்ய வேண்டியது,
குழந்தைகள் பாதுகாப்பு,
கற்றல் கற்பித்தல் முறை,
நலத்திட்டம்,
குழந்தை மற்றும் ஆசிரியருக்கான உளவியல் தேவை.
ஆகியவை எங்ஙனம் இருக்க வேண்டுமென்று தயாரிக்கப்பட்டது. அது இன்றைய காலத்துக்கும் தேவையாய் இருப்பதால் அதனை அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது.
மேலும் வரும் காலங்களில் எங்ஙனம் செயல்படலாம் என பல திட்டங்கள் பொறுப்பாளர்களால் முன்மொழியப்பட்டு அதனை ஒருங்கிணைத்து செய்யலாம் என தீர்மானிக்கப்பட்டது.
குறிப்பாக கொரோனா காலத்தில் மைண்ட் ஷோன் உதவியுடன் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட உளவியல் முதலுதவிப் பயிற்சி தற்போதும் ஆசிரியர்களுக்குத் தேவையாய் இருக்கிறது. அதனை ஆசிரியர்களுக்கு அரசாங்கம் விரைந்து வழங்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
சென்னை மண்டல பொறுப்பாளர் திருமிகு. சாந்தி அவர்கள் ஓய்வு பெற்றதை அடுத்து திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் திருமிகு. சாந்தசீலா அவர்களுக்கு சென்னை மண்டல பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும் விழுப்புரம் மண்டல பொறுப்பாளர் திருமிகு. இளங்கோவனுக்குக் கூடுதலாக பொறுப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர் திருமிகு. விசாலி அவர்களுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டது. புதிய பொறுப்பாளர்களுக்குக் கூட்டத்தில் பணி சிறக்க வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
வரும் காலங்களில் செய்ய வேண்டிய செயல்பாடுகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டு கூட்டம் சிறப்பாக முடிவுற்றது.


1 Comments
💐💐
ReplyDelete