நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிருவாகத் திறன் சார்ந்த பயிற்சி வழங்குதல் குறித்து தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

  நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நிருவாகத் திறன் சார்ந்த பயிற்சி வழங்குதல் குறித்து தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் பெயர் பட்டியல்.

Click here




மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு பார்வை (2)ல் காணும் செயல்முறைகளின்படி நிருவாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி அக்டோபர் 2023 முதல் 53 தொகுதிகளில் நடைபெற்றுள்ளது.


தற்போது 2024-25ஆம் கல்வியாண்டில் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சியானது 23.01.2025 முதல் 05.03.2025 வரை 11 தொகுதிகளாக இணைப்பில் கண்டுள்ளபடி அட்டவணையில் தெரிவித்துள்ளபடி நடைபெறவுள்ளது. எனவே, மேற்படி பயிற்சிக்கு இணைப்பு-1ல் இடம்பெற்றுள்ள நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இணைப்பு-2ல் இடம்பெற்றுள்ள கருத்தாளர்கள் (வட்டாரக் கல்வி அலுவலர்கள்) அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அவர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நாட்களில் நடைபெறும் பயிற்சியில் தவறாது கலந்து கொள்வதற்கு தேவையான


cckkalviseithikal

அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்குவதோடு, குறிப்பிடப்பட்ட நாட்களில் தலைமை ஆசிரியர்கள் / கருத்தாளர் - வட்டாரக் கல்வி அலுவலர்கள் பயிற்சியில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக பணியிலிருந்து விடுவிக்குமாறும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது.


மேலும், இப்பயிற்சியில் பங்கேற்கும் தலைமை ஆசிரியர்கள் கீழ்க்காணும் நடைமுறைகளை பின்பற்றும் வகையில் உரிய அறிவுரைகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கிடவும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments