மாணவர்களின் வருவாய் ஈட்டும் தாய் / தந்தை விபத்தில் மரணம் அடைந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ வழங்கப்படும் ₹75,000/-க்கான விபத்துக் காப்பீடு பத்திரம் பெற, விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.
Click here
பார்வை(1) முதல் (4) வரை உள்ள அரசாணைகளின்படி, வேலூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் இயங்கும் அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு முடிய கல்வி கற்கும் மாணவ/மாணவியரின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை விபத்தில் மரணம் அடைந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற மாணவ/மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதியுதவி வழங்கும் திட்டம் மூலம் ரூ.75,000/- க்கான விபத்துக் காப்பீடு பத்திரம் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.
cckkalviseithikal
இத்திட்டதின் கீழ் இவ்வலுவலகம் பெறப்படும் சில கருத்துருக்கள், சார்ந்த பள்ளியின் EMIS-தளத்தில் பதிவேற்றம் செய்யப்படாமல் அனுப்பப்படுகின்றன. மேலும் சில பள்ளிகள். EMIS-தளத்தில் மட்டும் பதிவேற்றம் செய்துவிட்டு, கருத்துருக்கள் அனுப்பப்படாமல் உள்ளன. இப்போக்கு கண்டிக்கத்தக்கதாகும்.
இனிவரும் காலங்களில் இது போன்று செயல்படாமல், இத்திட்டத்தின் கீழ் உரிய நேரத்தில் பாதிக்கப்பட்ட மாணவ/மாணவியர்கள் பயனடையும் பொருட்டு காலதாமதத்திற்கு இடமளிக்காமல் கருத்துருக்களை பள்ளியின் EMIS-தளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டு, 3 நகல்களில் மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு (இடைநிலை) அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து அரசு/அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
cckkalviseithikal
மேலும், இப்பொருள் சார்பாக பள்ளியிலிருந்து பெறப்படும் கருத்துருக்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சரிபார்ப்பு பட்டியலின்படி சரிபார்த்து மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) பரிசீலித்து தங்களின் பரிந்துரையுடன் 2 நகல்களில் இவ்வலுவலகம் அனுப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
இணைப்பு:
1. பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பப் படிவம்.
2. சரிபார்ப்பு பட்டியல்.
முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) 3/3 வேலூர்.

0 Comments